தாமரை

அன்று
குளத்தை மட்டும்
ஆட்சி செய்தது

இன்று
நிலத்தையும்
நம் குலத்தை
ஆட்சி செய்கிறது

சூரியன் வந்தால்
தாமரை மலரும்
தமிழ்நாட்டிலோ
சூரியன் வந்தால்
தாமரை மலராது அலறும்

ஆயினும்
தமிழின் இசை கேட்டு
மலர நினைத்தத் தாமரை
தமிழனின் வசை கேட்டு
வளர மறுத்தது

இதுவரை
செடியில் பூத்தத்
தாமரை
இன்று
நம் தேசியக் கொடியில்
பூத்துக் குலுங்குகின்றது

அன்று
தாமரை இருந்ததோ
இரண்டே ஜாடி
மக்களோ தவித்தனர் விடியலைத் தேடி

அப்போதுதான்
குஜராத்திலிருந்து
மக்களிடம் நாடி
அறிந்தார் அவர்களின் நாடி
புரிந்தார் நன்மைகள் கோடி
வந்தது அரியணை
அவரைத் தேடி
ஆள்கிறார் வெற்றி வாகை சூடி
அவர்தான் நம் பிரதமர் மோடி

திரியனையில் அமர்ந்து
வீட்டின் இருள் நீக்கும்
சுடரைப்போல்
இவர் அரியணையில்
அமர்ந்து நாட்டில்
இருள் இடரை நீக்கியவர்

தாமரையின்
இதழ்களுக்கு
வண்ணம் பூசி
உலகெங்கும் இந்திய
அழகைப் பேசவைத்தவர்

நேர்மையால்
அறியாசனம் ஏறிய
தாமரையே
உன் புகழ்
அறியா சனங்களுக்குத்
தா மறையே

மக்களே
தாமரையில்
நீரும் ஒட்டுவதில்லை
அதனால்
நீரும் ஒட்டுவதில்லையோ

தாமரை
கலைவாணியின் இருக்கை
குளத்தில் நீர் இன்றி
ஓடிந்துவிட்டது அதன் இறக்கை

தூர்வாரி வாழவைப்போம் இயற்கை
மாரி பொய்பது இயற்கை
குளங்களை இயற்கை வளங்களைப் பேணாவிடில்
நீர் வளம் எய்தும் இயற்கை

பிறகு கிடைக்காது சோற்றுப்
பருக்கை
மக்களே
நீர் நீரை சேமிக்க வலியுறுத்தி
வணங்குகிறது என் இரு கை

நீரை சேமிப்போம்

எழுதியவர் : புதுவைக் குமார் (7-Jul-19, 7:58 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : thamarai
பார்வை : 129

சிறந்த கவிதைகள்

மேலே