அன்பு தங்கை சௌமியா பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ரோஜா பூக்களே! உங்கள் இளவரசிக்கு
இன்று பிறந்தநாளாம்
சூரியனே! இன்று நீவிர் உதிப்பதை
நிறுத்திக்கொள்! பகல் நிலவு
இவள் உதித்தநாள் இன்று
உன் பெருமை குறைய கூடும்
புயல் காற்றே! உன் சீற்றத்தை
அடைக்கிக்கொள்! பனி காற்று
இவள் உன்னை செதுக்கி விடுவாள்
பனி பாறையாக
கங்கை நதியே! உன் புனிதத்தின்
பெருமையை ஓரம்
கட்டிக்கொள்
புனித தேவதை இவள்
கூவும் குயிலே! உன் குரலுக்கு
இங்கே ஏதும் அவசியம் இருக்காது
பெருமை குறையும் முன்
ஓடி விடு
காதல் என்ற ஒற்றைஒற்றை வரியே!
உன் அகராதியில் இவள் பெயர்
இருப்பின் கிழித்து விடு இல்லை
எரிக்க படுவாய் இவள் கரங்களால்
இமயமே! இன்னும் ஏன்
இந்த ஆணவம் இவள்
கோபத்தைக்காட்டிலும் உன்
உயரம் சிறியது தான்
தமிழக அரசே! பாதுகாப்பு படையை
அனுப்பி வையுங்கள்
பூங்கள் எல்லாம்
எல்லை மீறுகின்றன...
இன்று இவள் கல்லூரி செல்வது கடினம் தான்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சௌமியா
தங்கையே! 🎂👑
#பசுபதி