பிணங்களின் புலம்பல்
கல்லறையிலுமுண்டு நல் மனசு-சில
சில்லறைகளிடமில்லாதது ஏனோ
நல்லறங்கொண்டு இல்லறம் வாழாமல்
பிணங்கள் பிதற்றுவது ஏனோ
நற்பிணங்கண்டு மனித
ஜடங்கள் அழுவது ஏனோ
பணங்கண்டு கூடிய கூட்டம்
பிணங்கொண்டதும் விலகியதும் ஏனோ
அடிகள் பல கண்டு
ஆறடிக்குள் அடங்குவது முறையே
பிணங்கள் புலம்புவதும் சரியே