மரணம் எப்போது????
பொறுமையில் நடந்தேன்
பொறாமை தாக்கிற்று...
வறுமையில் நடந்தேன் - வீண்
பெருமை தாக்கிற்று...
சிறுமையில் நடந்தேன் - சீர்கெட்ட
செழுமை தாக்கிற்று...
சக்தியற்று வீழ்ந்தவன்
சட்டென எழுந்தேன்
சடுதியில் தெளிந்தேன்...
ஏய்த்தவர் எல்லாம்
எதிரே பள்ளத்தில்...
தூக்கி விடச்சொல்லி
நீட்டினர் கைகளை...
கேட்டதா மனம்? - நானும்
நீட்டினேன் கைகளை..
இழுக்க நினைத்தவன்
இழுக்கப்பட்டேன்....
வீழ்த்தி சாய்த்தனர்
மிதித்து ஏறினர்...
மீள முடியாமல்
மயங்கி கிடக்கிறேன்...
மரணம் எப்போது?????