செல்லத்துக்கு தாலாட்டு
செல்லமே
என் தங்கமே
குறுநகை கொண்டு
ஆலங்கட்டியாய் வந்தவனே
செங்கதிராய் வளர்ந்து
தவழ்ந்து, நடந்த சந்திரனே
கன்னக்குழியில்
சிக்கிக் கொள்ள வேண்டும்
தொப்பிள்குழியில்
முத்தம் தந்து சிரிக்க வைக்க வேண்டும்
அன்னைக்காக எங்கும் போது
இதயம் உன்னோடு உருகியது
உன் கரைச்சலும்
புன்முறுவலும் இல்லாமல்
ஆதவன் அகலவில்லை
உன் கீச்சலுக்கு வெண்பா எழுதினேன்
உனக்கென மார்பை மைதானமாக்கினேன்
ஆருயிரே உன் நாவில்
தமிழ் குலைந்து
நனைந்து
ரீங்காரமாய்
கேட்கும் செவியில் தேன் பாச்சியது
உன் கிறுக்கலுக்கு
ரசிகர் கூட்டம் கூடியது
மந்திர புன்னகைக்கு
உலகே அடிமையானதே
எச்சில் துளிகள் தேகத்தை நனைக்க
விரல்கள் இதயத்தை இறகாய் வருட
உன் அன்பால்
கண்கள் நெகிழ்ந்தன செல்லமே.