காதல் செய்யும் கண்ணாலா
ஹே நண்பா
காதல் செய்யும் கண்ணாலா
கண்களால் பேசும் பூபாலா
கார்குழல் விழியால்
காந்தமாய் மனதை கவர்ந்து
இதழில் தேனை மறைத்து
தினம் தினம்
துளி துளியாய் தந்தவனே
கண்ணீர் கன்னத்தை தொடும் முன் மறைத்து
பொல்லாத காதலால்
இதயத்தை ரெட்டிப்பாய் துடிக்க செய்யும் மாயவனே
பொழுதும் உன் மார்பில் குடி கொண்டு
நேரம் அறியாமல் துயில் கொள்ள வேண்டும்
நீ சுவாசித்த காற்றில் புலரந்த மலராய்
காலையில் உன் மடியில் புதிதாய் பிறந்தேனே
யாழ் மீட்டிய குரலுக்கு
கவிபாட போராடி தோற்றவள் நானே
மேகமாய் என்னை காப்பாற்றியா அரிமாவே
சிரிப்பை மட்டும் பரப்பிய மன்னவனே
கவலையறியா குறும்பனே
சொல்ல முடியாத அன்பை
வார்த்தையின்றி சொல்ல வைத்து
எங்கும் என் கனவை நனவாக்கி
எல்லையில்லா வானத்தில்
அலராய் பறக்க செய்தவனே
பொக்கிஷமே !
நீ இல்லா ஒரு நாளும் நீளாதே அரும்பொனே !