காதல் ஆத்திச்சூடி
அன்பை தந்த
ஆருயிரே !
இரு உயிரை ஓர் உயிராக்கிய
ஈழத்தலரியே !
உன் விரல் கோர்த்து
ஊரெல்லாம் சுற்ற
எனை முழுமையாக்கி
ஏக்கம் தீர்த்த
ஐசுவர்ரியமே, வானவில்லாய் வாழ்வை
ஒளிரச் செய்த
ஓவியமே, இருவருள்ளும்
ஒளவியமின்றி
அஃதே காதல் மலர்ந்ததே.