உனை வர்ணிக்க தெரியவில்லை
உவமையே உருவகமாக மாறி
எதிரே நிற்கும் போது
எப்படி வர்ணிப்பேன் உயிரே????
எனக்கு வர்ணிக்க தெரியவில்லை அன்பே!!!
.
கரும் இருட்டினை
கத்தரித்து வைத்த
உன் கருவிழிகளை
வர்ணிப்பேனா??
.
சீண்டினால் சினுங்கும் சிப்பியாம்
சிறு காது மடல்களை
வர்ணிப்பேனா?
.
ஆரஞ்சு சுளைகளை
அழகாக அடுக்கிய
உன் இதழ் அழகை
வர்ணிப்பேனா?
.
வெண்நிலவை மென்மையாக
செதுக்கி வைத்த
உன் பல்வரிசையை
வர்ணிப்பேனா?
.
எனக்கு வர்ணிக்க தெரியவில்லை அன்பே!!!
.
பட்டு நூலால் தொடுத்த
உன் கருங்கூந்தல் அழகை
வர்ணிப்பேனா?.
.
தொட்டால் வழுக்கும்
சங்குகளாம் உன் கழுத்தழகை வர்ணிப்பேனா?
.
உடுக்கைப் போல
இடையில் குறுகிய
உன் இடுப்பழகை
வர்ணிப்பேனா?
.
வாழையென வழுக்கும்
உன் கெண்டைக் கால் அழகை
வர்ணிப்பேனா?
.
சேற்றோடு வாழ்ந்தும்
மாசுப்படியாத தாமரையாம்
உன் பாதம் பற்றி
வர்ணிப்பேனா?
.
உவமையே உருவகமாக மாறி
எதிரே நிற்கும் போது
எப்படி வர்ணிப்பேன் உயிரே????
எனக்கு வர்ணிக்க தெரியவில்லை அன்பே!!!!
.
..........ரூபன் புவியன்.......