நெஞ்சக் காயம் நீக்கும் மருந்து

================================
நினைப்பவ ரெல்லாம் நம்மை
நினைப்பவ ரில்லை. இங்கு
நினைத்திட மாட்டா ரென்று
நினைப்பவர் நம்மை நாளும்
நினைவினில் வைத்தி ருக்கும்
நினைவுள மனித ராகி
நினைவுகள் வாழு மட்டும்
நினைத்திட வைக்கக் கூடும்
=
நினைத்திடக் கூடா தென்னும்
நினைப்புள நெஞ்சை நீயும்
நினைப்பதை விட்டுப் போடு. ,
நினைப்பதை விட்ட போதும்
நினைப்புடன் வாழு வோரை
நினைப்பது நல்ல தாகும்
நினைவுகள் மாயு மட்டும்
நினைப்பவர் மாயா ரிங்கே.
=
நினைப்பதை நினைத்து பின்னர்
நினைவினை விட்ட கற்றும்
நினைவதை மறந்து விட்டு
நினைத்தவர் மறந்த போதும்
நினைத்ததை மறந்தி டாத
நினைவுகள் வளர்த்துப் பாரு
நினைவுகள் நெஞ்சின் காயம்
நீக்கிடும் மருந்தா யாகும்
==
= மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (16-Jul-19, 2:10 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 235

மேலே