யாரோ நான்- எல்லாமும் நான்

கைதியாய் நான் காலமெல்லாம்

பாவியாய் நான் பார்வையெல்லாம்

பேதையாய் நான் மடமையெல்லாம்

வரமாய் நான் சாபமெல்லாம்

தையலாய் நான் மையலெல்லாம்

வார்த்தையாய் நான் மௌனமெல்லாம்

சோலையாய் நான் பாலையெல்லாம்

கண்ணீராய் நான் விழிகளெல்லாம்

கானலாய் நான் வீதியெல்லாம்

பூவாய் நான் மஞ்சமெல்லாம்

ரணமாய் நான் நெஞ்சமெல்லாம்

புழுதியாய் நான் மணலெல்லாம்

மூங்கிலாய் நான் காடெல்லாம்

வெறுப்பாய் நான் நேசமெல்லாம்

மரணமாய் நான் ஜனனமெல்லாம்

யாரோ நான்- இங்கு எல்லாமும் நான்

எழுதியவர் : பர்வின்.ஹமீட் (16-Jul-19, 9:29 am)
சேர்த்தது : பர்வின் ஹமீட்
பார்வை : 133

மேலே