அந்தரத்தில் மிதக்கும் ஆகாயம் ,....
அந்தி தேய்ந்து இருளப்பி பொருள் கொண்டது இரவு..
இருள் நிழல் தேட தவம் கொண்டது ஒளி..
விடிந்துவிட்டதாய் எண்ணியவை - இன்னும்
விடியவில்லை..
கடந்துபோன இருளிற்கு உயிர் வந்தது
அதன் நிழலில்..
இருள் பூசி ஒளிருது வானம்.
அதன் நிறம் கண்டு வெடித்தது மோகம்.
அந்தரத்தில் மிதக்குது ஆகாயம்.
அதை தீண்ட நீளுது நீட்சி .
மின்னலாய் வளையுது புருவம் .
கண்கள் கொண்டு விடியுது உடல்.
ஆழ்நிலை தியானம் கொள்ளுது ஆன்மா.
அதன் பொருளற்ற மேன்மை இருளாய் படர்ந்தது.
வீழ்ந்துகொண்டே இருக்குது இரவு
தொலைந்து போன குழந்தையாய் அழுகிறது இருள்.
கைவீசி அழைக்குது அந்தி வானம்
கைவிலகி சென்றது மர்ம ஒளி - இங்கு
விடிந்துவிட்டதாய் எண்ணியவை இன்னும்
விடியவில்லை - அது
அந்தரத்தில் மிதக்குது ஆகாயமாய் .