தேடித்தான் வரும்

தேங்கிக் கிடக்கும்
நீரைத் தேடிவரும்
நோய்க் கிருமியெல்லாம்..

தூங்கிக் கிடக்கும்
துணிவற்ற மனிதனைத்தான்
தேடிவரும்
தோல்வியெல்லாம்..

செயலில்லாமல்
சேர்ந்து கிடக்கும்
செல்வத்தைதான்
தேடிவரும்
கோடி கோடி
பாவமெல்லாம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (16-Jul-19, 5:30 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : thedithan varum
பார்வை : 146

புதிய படைப்புகள்

மேலே