கைம்பெண்ணின் காதல்

வார்த்தெடுத்த
வார்த்தையெல்லாம் /
சேர்த்தெடுத்தேன் கவிதைகளாக /
எனது ஆசையினை
உன்னிடம் சொல்லிடவே/

அந்தப் பாக்கியம்
எனக்கில்லை /
என்று நினைத்து
கரைத்து விட்டேன்/
கண்ணீரால் மெல்ல/

சேர்த்தெடுத்த
சொற்கள் எல்லாம் /
சேதமாய்ப் போனதையா /
நான் தாரை
தாரையாய் கண்ணீர்
வடித் ததையை என் சொல்ல ./

எட்டி எட்டி நீ போகின்றாய்
என்னுள்ளே குட்டிக் குட்டி
நினைவுகளை விதைத்து விட்டு./

கட்டிப் போட்ட மனம் தான்
கயிறு அறுத்து விட்டதையா /
பசுவைக் கண்ட கன்று போல் /
உன் அன்பான வார்த்தை
தனைக் கேட்டதுமே /

விலகி விடுவாய் என்று
அறியாத நெஞ்சம் /
தவிக்கிறது இன்று
ஏக்கத்தில் கொஞ்சம் /

பத்தினியாக
இருந்து என்ன பயன் /
பணத்தோடு
வாழ்ந்து என்ன பயன் /
கன்னியாக இல்லையே
காதலைச் சொல்லவே /


அது காலம் கொடுத்த தண்டனை/
இதனாலே நீ கொடுத்தாயே?
பிரிவு என்னும்
சொல்லோடு இதயமதை /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (17-Jul-19, 7:03 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 120

மேலே