அவளும் நானும்

அவளுக்கென்ன அவசரமோ
அடைமழையிலும் நனையாமல்
கடந்து சொல்லுமளவுக்கு

இந்த கிளிகளுக்கும்
என்ன அவசரமோ அதற்குள்
கச்சேரியை முடித்துக்கொள்ள

இந்த நிலவுக்கும் இன்று என்னவாயிற்று
சுவர்க்கோழிகளின் கூவலை
கேட்கும்முன் தூங்க செல்வதற்கு

இப்படியே நான் மட்டும்
உறைபனியில் நனைந்து நனைந்து
குளிர் காய்ந்துகொண்டிருக்க

வார்த்தைகள் தேவையில்லை
நீடிக்கும் மௌனமேபோதும்
நாம் கதைகள் பேசிட
இரவின் இருளிலும் நடைபோட
இளையராஜாவின் இன்னிசை போதும்
நான் உன்னோடு கலந்துவிட
நான் உன்னோடு கலந்துவிட

**************************இப்படிக்கு நான்
********************************** "காற்று"

எழுதியவர் : மேகலை (19-Jul-19, 9:01 am)
சேர்த்தது : மேகலை
பார்வை : 528

மேலே