ரண்டு பேரும் பன்னா

நண்பர்கள்ன்னா நம்ம நம்ம ரண்டு பேரு மாதிரி இருக்கணும்டா கண்ணா.
@@@@@@
ஆமான்டா. உம் பேரும் கண்ணன். எம் பேரும் கண்ணன். முதுகலைப் பட்டம் வாங்கற வரைக்கும் நாம ரண்டுபேரும் வகுப்புத் தோழர்கள்.
@@@@@@
ஒரே துறையில ரண்டு பேருக்கும் வேலை கெடச்சுது. நம்ம ரண்டு பேரோட திருமணமும் ஒரே நாள்ல நடந்தது.
@@@@@
உன் மனைவிக்கு பையனும் என் மனைவிக்குப் பெண் குழந்தையும் ஒரே நாள்ல ஒரே நட்சத்திரம் லக்கினத்தில பொறந்தாங்க.
@@@@@
குழந்தைங்க ரண்டு பேரும் வெவ்வேற ஊருல பொறந்தாலும் சோதிடர்கள் சொன்னபடி ரண்டு பேருக்கும் தற்கால தமிழர்களின் பெயர் ஆர்வக்கோளாறுக்குத் தகுந்தபடி ஒரே பேரா வச்சது நம்மளோட நட்புக்கு அடையாளம்டா.
@@@@@
ஆமாம்டா. எம் பொண்ணுப் பேரும் பன்னா. உம் பையன் பேரும் பன்னா.
@@@@@
சத்தியமா உலகித்தில வேற ரண்டு நண்பர்களுக்கு இதுபோல பொருத்தம் அமையவே அமையாதுடா கண்ணா.
@@@@@
இன்னும் சொல்லவேண்டியது ஒண்ணு இருக்குதுடா கண்ணா.
@@@@
ஆமாம்டா கண்ணா. உன் மனைவி பேரும் மங்கை. என் மனைவி பேரும் மங்கை.
■■■■■■■■■◆◆◆■◆◆■■■■■■◆■ ◆◆
Panna = Emerald. .Unisex name.

எழுதியவர் : மலர் (20-Jul-19, 7:45 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 114

மேலே