சந்திரயான்-II

இந்திய தேசத்தின் புதிய மந்திரம் நீ
சந்திரனை ஆய்ந்தறியும் அதிசுந்தரன் நீ
இஸ்ரோ பிரம்மாக்கள் ஆக்கும் விந்தை நீ
அசரா அறிவியலறிஞர் இயக்கும் சிந்தை நீ
பத்து வருட திட்டம் நனவாகும் நாளின்று.
எத்து விடும் தோல்விகளும், எட்டி போய் தள்ளி நிற்கும்
கண்புருவம் வளையும், உன் முயற்சி நிலை கண்டு
தென் துருவம் தொட ஏகும் - கணவான் நிலா சென்று
நெஞ்சுரமிகு ரஷ்யர் விண்ணேகி வென்றதுபோல்,
அறிவு சார் அமெரிக்கர் ஆய்ந்துணர சென்றதுபோல்,
பணிவு சேர் சீனர் பாங்குடன் நிலவில் நின்றதுபோல்,
துணிவு சால் இந்தியரும் சந்திராயன் 2 கண்டனரே!
சுற்றுக்கலன் ஒன்றும், தரை இறங்கும் கருவி ஒன்றும்,
சுற்றித்திரிபவன் என்றும் மும்மூர்த்தியாய் உன் பிறப்பு
வெற்றுக்கலமாய் அழியாது, சுற்றி வந்தே நிலவை
வெற்றிக்கலமாய் ஆய்ந்தறிந்து சற்றே எழுவாயே!.
அருமை கலாமின் அழகிய தமிழ் மகன்கள் மயில்சாமி சிவனின்று
அன்னை தமிழுக்கு அணி புனையும் நேரமிது
பெருமை பாரதத்தின் புகழை ஏற்றிட, பாரில் எழுந்திட
விண்ணேகும் வைபவம் வெற்றியோடு தொடரட்டும்.
வாழ்க பாரதம், வெல்க பாரதம், வாழ்க தமிழகம் வளர்க தமிழகம்.