வள்ளுவன் வழியில் சிந்தித்தேன்
கூடா குடிநட்பு :
வாடாது என்றும் வளர்ந்திடும் நன்நட்பு
கூடாநட் போகுழிஆழ்த் தும் .
கூடாநட் பால்குடித்தான் பாடினான் ஆடினான்
ஆடாதோர் நாளடங்கி னான்
கூடாநட் பால்போதை யில்மரியா தைமறந்து
வாடாபோ டாஎன்ற னர்
மேடாஇல் லைபள்ள மாஎன் றறியாதான்
கூடாநட் பால்விழுந் தான்
ஏடால் எழுத்தாணி யால்உரைத்தான் வள்ளுவன்
கூடாநட் பின்பெருந் தீங்கு