காமத்தால் நோய் வந்து

காதலால் கட்டுண்டு - பெரிய
காமத்தால் நோய் வந்து
காலத்தால் சிதையுண்ட வாழ்வால்
கடந்து செல்லும் வயது

கடல் அரிக்கும் பாறையாய்
கணந்தோறும் தேய
கடைசியாய் எவ்வகை ஆகுமோ
இளமையை இன்பத்திற்கு ஈடு வைத்ததால்

பிணி மூப்பு சக்காடு வருமுன்
பிழையை சிறிதே சரியாக்கினால்
பிழைக்க வழி சிறிது கிட்டுமோ
பேருவகை பெரியது கிடைக்குமோ

ஆலிலை அடர்த்திப் போல் - எண்ணம்
அனைத்து நிலையிலும் அழுத்த
அரணாக எது வந்து காக்குமோ
அருமை வாழ்வு அணுக்கமாய் அமையுமோ

எந்தெந்த வயதிற்கும் ஏற்றார்போல்
ஏதேதோ சோதனை எவ்வழியாயும் வர
எவ்வகைக் கொண்டும் ஏற்றம் காணலையே
எதிர்காலம் இதை எளிதாக்குமோ?
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (23-Jul-19, 8:58 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 58

மேலே