வசியக்காரி வசந்தக்காரி
வசியக்காரி வசந்தக்காரி
~~~~~~~~~~~
விழிகளால் மொழிகள்
ஏதும் பேசவில்லை
கொஞ்சம் கொஞ்சி காதோரக்
கெஞ்சல் கெஞ்சவில்லை
உரசலும் இல்லை ஒரு
விலகலும் இல்லை
ஒரு கெணப்பும் இல்லை
ஒரு முருவலும் இல்லை
தொடவும் இல்லை விட்டு
விடவும் இல்லாமல்
என்ன சொக்குப் பொடி
போட்டாளோ
சரவத்தல் சுக்கு போல
கிடத்திவிட்டு அவள் தேவையை
மனமாற முடித்திக் கொண்டு
அம்போ என விட்டு விட்டு மாயமாகிவிட்டாள்
இருக்கும் இடத்தை கூட சொல்லாமல்
பறந்தது எங்கே என்று ஓடினேன்
தேடினேன் கால்கள் கடுத்தது தான் மிச்சம்
கண்ணுக்கு தெரியவே
இல்லை அயர்ந்து உறங்கியவன் திடுக்கிட்டு எழுந்து பார்த்தால்
என் நாசிக்குள் போவதும் வெளியில் வருவதுமாக நடனம் பயின்று கொண்டிருந்த அவளேயவள் தான்
அந்த என் உயிர் தென்றளாளென் கண்ணில் படாத மாயக்காரி வசியக்காரி அந்த வசந்தக்காரி மந்திரக்காரி தந்திரக்காரி இந்த எந்திரத்தை இயக்குகின்ற
எரிபொருள் வசந்தம் அவளே
அதனால் அன்பார்ந்த நன்றியை அவளுக்கு மட்டும் சமர்ப்பித்தே ஆகவேண்டும் என் கடமையுமாகும்
°°°°°°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி "கண்டம்பாக்கத்தான்"