காட்டில் ஆடு
அடர்ந்த பச்சை காடு
அதில் மேயும் வெள்ளாடு
புழுதி போல பனி மேகங்கள்
மலையின் மேல ஒட்டிக்கொள்ள
பெரு மலையில்
சிறு மழையில்
நனைந்தபடி
ஓயாராமாக
நீ நடக்கையிலே
வானத்தை தொட்டுகொண்டே
கை அசைத்தாடும்
பனை ஒலைகளும்
பச்சை காட்டின் நடுவே
ஆட்டு கூட்டத்தை
அழைத்து
அதை மேய்க்க
பிரம்பை வைத்து
அதை ஊன்றி
நடக்கையிலே
மறு கரம் ஓங்கி
குடையை யேந்தி
காட்டுவழி போரவனே
கவலைப்படாதே
நானும் உன் கூட வரேன்
கவலைப்படாதே
என்று உன் நண்பன்
குரலும் ஒலிக்க
கம்பீரமாய் நீ நடக்க
உன் வழியே
ஆடும் நடக்க
மேற்குமலை தொடர்ச்சியே
நீ விடைபெற
மேகங்களை அனுப்ப
கரு மேகங்களும்
உன்னை வழியனுப்ப
நான் எழுத உன்
புகைப்படம் கிடைக்க
சொல்ல வார்த்தை இல்லா
விடைபெற்று கொள்ள
முடிக்கிறேன்
என் தொடர்ச்சிய