ஏதோ கேட்க நினைக்குதே

என்னையே பார்க்கிறாய்
எதுக்கோ பார்க்கிறாய்
என்ன சொல்ல போகிறாய்
எப்ப சொல்ல போகிறாய்

உன் கண்கள் இரு திசையிலே
என்னை மட்டும் பாக்குதே
நரம்பு தெரியும் உன் கரங்கள் கூட
ஏதோ கேட்க நினைக்குதே

பாய் விரிக்கும் அளவு தானே
உன் வீடு இப்ப இருக்குதே
தாங்கிபுடிக்கும் ஒத்த கட்டையிலே
உன் உடலும் சாய்ந்து நிக்குதே

உன் தலை முடிய கோர
அங்க உனக்கு யாரும் இல்லையே
உன் தலையெழுத்தை மாத்த
இப்ப எனக்கு வழியும் இல்லையே

கழுத்தில் உள்ள நரம்பு சுருண்டு
உன் தாகத்த நானும் உணருறேன்
கள்ள ஓட்டு போட்டாவது உனக்கு
தண்ணி வர வைக்கிறேன்

சட்டையில இருக்கும் ஒரு ஊக்க வச்சி
உன். மானத்தை நீயும் மறைக்கிற
கிளிஞ்ச இடத்த மறைச்சி இப்ப
ஒட்டு போட்டு ரசிக்கிற

பட்டினியா இருந்து இப்ப
வயித்த சுருட்டி வைக்கிற
பாவமான உன் முகத்த
பார்த்து நானும் இப்ப அழுகிறேன்

எழுதியவர் : கணேசன் நயினார் (26-Jul-19, 12:34 am)
சேர்த்தது : Ganesan Nainar
பார்வை : 240

மேலே