உதவிக் கரங்கள் நீட்டுவோம்---பாடல்---

(இது ஒரு மீள்பதிவு. திருத்தம் செய்த போது அந்தப் பதிவில் வரிகள் காணாமல் போய் விட்டது. மீண்டும் பதிந்தாலும் வரவில்லை. அதனால் இந்தப் பதிவு.)

பல்லவி :

உதவிக் கரங்கள் நீட்டுவோம் - நாம்
உதவிக் கரங்கள் நீட்டுவோம்... (2)

மழையால் வந்த வெள்ளம் - நம் உறவை
இலையாய் கொண்டு செல்ல
மழையால் வந்த வெள்ளம் - நம் உறவை
இலையாய் கொன்று செல்ல

துடிக்கும் உயிரே... தவிக்கும் உறவே... (2)

எழுந்து வா தோழா - நீ
எழுந்து வா தோழா...

உதவிக் கரங்கள் நீட்டுவோம்...


சரணம் :

இருப்பதை நீயும் பகிர்ந்திடு - மழையில்
இழந்தவர் வாழ்வை மீட்டெடு
அழித்தது போதும் நிறுத்திடு - மனதில்
இயற்கையைப் பார்த்து வேண்டிடு... (2)

மலைகள் சரிந்து மனைகள் புதைந்து
தொடரும் கொடுமை தண்ணீரில்
உடைமை இழந்து உறவை இழந்து
உருகும் விழிகள் கண்ணீரில்...

கடமை நினைந்து கதவைத் திறந்து
உணர்வில் இதயம் ஒன்றாகு
நிலைமை உணர்ந்து செலவைக் குறைத்து
உதவும் நிமிடம் இன்றாகும்...

எழுந்து வா தோழா - நீ
எழுந்து வா தோழா...

உதவிக் கரங்கள் நீட்டுவோம்...

எழுதியவர் : இதயம் விஜய் (26-Jul-19, 2:15 pm)
பார்வை : 2976

மேலே