அழகு வாழ்க்கை

அல்லி பூவும்
பூத்திருக்க
அழுங்காம
நான் பறிக்க

கலங்காதே
என் கண்ணே
நான் இருக்கேன்
உன் பின்னே

மாமன் மக நீயிருக்க
மாமன் இங்கு நானிறுக்க
மனசார பேசிடலாம்
கலங்காதே என் கண்ணே

பொட்டல் காட்டில்
கொட்டாய் போட்டு
போவோம் இந்த
ஊரை விட்டு
மனகதவை
திறந்து வைத்து
மணவாழ்வை
துடங்குவோமா

தொட்டில் கட்ட
கட்டில் போட்டு
கரங்களிலே
அடக்கிவைத்து
ஆசைதீர முத்தமிட்டு
மயக்கத்திலே
சேர்த்து இப்ப
புதுக்கவிதை
படைத்திடலாம்

மாதவிடாய் நின்ற போக
மறுபிறவி எடுக்க இப்ப
மாதங்களை ஓட்டி வந்தாய்
மகப்பேறு மாசம் இது
மனவலியையும்
மறைத்துவிட்டு
மன்னன் வரும் நேரம் என
மன கதவை திறந்துவைத்து
நேரம் போக காத்திருந்தேன்

அன்பு மகன் துள்ளி குதிக்க
அவனை கையில் நான் பிடிக்க
வேதனையும் மறக்குதடி
வேடிக்கை பார்க்க தோனுதடி
மார்பிலே அவன் பால் குடிக்க
மடியிலே அவன் கண்ணுரங்க
மார்தட்டி குதிப்பேனடி
மனதார ரசிப்பேனடி

அவன் பள்ளி போகையிலே
பாடத்தை படிக்கையிலே
பால் நிலா சோற இப்ப
நானே தான் ஊட்டுவேன்டி
கல்லூரிக்கு படிக்க போனா
காதல் கீதல் பண்ணி வந்தா
கண்டிப்பா இருக்க தானே
நானும் இப்ப பழகுரேண்டி

வாழும் காலம் முடியும் நேரம்
வாசல் வந்து நிக்குதடி
நானும் இப்ப போக போறேன்
மகனை நல்லா பாத்துக்கடி
அவன் மனசு நோகும்படி
ஒரு காலம் செய்யாதடி
அவன் அழுதா அடுத்த நொடி
என் உயிரே போகுமடி
அவன் வரும் முன்னே
நான் போய் வருகிறேன்

எழுதியவர் : கணேசன் நயினார் (25-Jul-19, 9:53 pm)
சேர்த்தது : Ganesan Nainar
Tanglish : alagu vaazhkkai
பார்வை : 492

மேலே