வானம் கருக்குதடி வட மூலை மின்னுதடி
வானம் கருக்குதடி வட மூலை மின்னுதடி
வலசை போன கொக்கெல்லாம் வந்திங்கு அமருதடி
வடமேற்கு மழை வந்தால் வளமாய் இருக்குமடி
வானம் கருணையோடு பொழிந்தால் வாழ நல்லதடி
யானைக்கும் எறும்புக்கும் இதமான மழை வேண்டுமடி
யாவரையும் கேளீராய் எண்ணினும் மழை வேண்டுமடி
யாதார்த்த உலகத்தோருக்கும் வான் மழை வேண்டுமடி
யாப்பில் சிறந்தோரைக் காக்க புனல் பொழியணுமேடி
நீட்டினாலும் மழுக்கினாலும் நிலையாய் நின்றாலும்
நிர்வாண கோலம் பூண்டு நெடும்பயணம் சென்றாலும்
பஞ்சகச்சம் கட்டி தினம் பண்டிதம் பண்ணாலும்
பயிர் விளைய மழை பெய்தாலே உயிர் வாழ்தலாகுமடி
- - - -நன்னாடன்.