கடவுளுக்கு ஒரு குறுஞ்செய்தி

கடவுளுக்கு ஒரு குறுஞ்செய்தி
(குட்டிக் கதை)
~~~~~~~○~~~~~~~~

""அம்மா நீங்க வணங்கும் கடவுளோட போன் நெம்பரை கொடுங்க"" தந்தையை இழந்து நிற்கும், வேறு யாரோட உதவியும் இல்லாததால் பசி தாள முடியாததால், வீட்டில் ஒன்றும் இல்லாததை வைத்து அம்மாவால் முடியாத காரணத்தால் மனமுடைந்து கேட்டான் ஆறு வயது மகன்

""ஏண்டா"" சடாலென திரும்பி குழப்பத் திலும் ஆச்சரியமாகவும் பார்த்தாள் தாய்

""குடும்ப அட்டை இருக்கறது அரிசி பருப்பை வாங்க கையில் காலணா கூட இல்லை அதனால் நாம கஞ்சிக்கு கூட வழியில்லாமல் வாடுரோமே இதை எடுத்துச்சொல்லி உதவி கேட்டு ஒரு குறுஞ்செய்தின்னு சொல்றாங்களே அதை பண்ணி பார்ப்போமே கடவுளுக்கு"" என்றான்

அதைக்கேட்டு தாயிக்கு சிரிப்பாகவும் அதே சமயத்தில் கண்களில் பொளப் பொளவென கண்ணீரும் வடிந்தது முந்தானையால் கண்களை துடைத்துக்கொண்டவாறு சொன்னாள் ""கடவுளுக்கு ஏதுடா போனும் நெம்பரும் "" என்று

"" அப்போ நாமே பரவாயில்லை போல இருக்கு, நம்மகிட்ட அப்பா விட்டுட்டு போன ஓட்டை போனாச்சும் இருக்கு கடவுள் நம்பளைவிட ஏழைபோல இருக்கு பாவம் நான் மட்டும் வசதியா இருந்திருந்தா கடவுளுக்கு ஒரு போன் வாங்கி கொடுத்திருப்பேன் இப்போதைக்கு நானோ ஓட்டாண்டி "" என்றான் மகன்

""அப்படியெல்லாம் பேசக்கூடாது தப்புன்னு தாடையில் போட்டுக்கோ (கதவை தட்டும் சத்தம் கேட்கிறது)
யாரோ கதவை தட்டுறாங்க போய் கதவை திறந்து யாருன்னு பாரு"" என்றாள் தாய்

""அம்மா அரிசி பருப்பு சக்கரை எண்ணை எல்லாம் வீடு வீடா இறக்கி வச்சிட்டு போயிட்டாங்கம்மா அதிலே உங்க பெயரில் சீட்டு ஒன்னு இருக்கும்மா "" என்றான் மகன்

சீட்டை எடுத்து படித்து பார்த்துவிட்டு "" நீ தான் கடவுளுக்கு குறுஞ்செய்தி அனுப்ப நெனைச்சியே அதான் கடவுள் உனக்கு அனுப்பி வச்சிருக்கான் "" என்றாள் தாய்

"" அம்மா நினைப்பதெல்லாம் நடக்குதுன்னா தெய்வமுன்னு ஒன்னு இருக்குன்னுதானேம்மா அர்த்தம் ""

""அந்த சீட்டுல என்ன எழுதியிருக்கு படி"" என்றாள் தாய்

முதல் முறையாக வீடுவீடாக அத்தியாவசிய பொருள்களை அரசாங்கம் இலவசமாக வழங்க ஆணையிட்டு இருக்கிறது அதன் பிறகு மாதா மாதம் நிர்ணயித்த விலை வசூலிக்கப்பட்டு பொருள்கள் வீடு தேடி வந்துவிடும் (இது உங்கள் கவணத்திற்கு ) என்று எழுதப்பட்டு இருக்கிறது அம்மா ""

""எப்படியோ உன் வேண்டுதல் சொடக்கு போட்ட மறுகணமே அருளப்பட்டது கடவுளுக்கு நன்றி சொல்"" என்றாள் தாய்

""கடவுளே நான் பெரியவன் ஆகும் வரை எங்களுக்கு இந்த உதவியை செய்யிங்க அதன் பிறகு நிறுத்தி விடுங்கள் நீங்க செய்த உதவிக்கு பிரதி பலனா எங்களை போல் உள்ளவர்களுக்கு உங்கள் பெயரால் ஈடு செய்து விடுகிறேன் கடவுளே"" என்றான்

தாய் மகனை கட்டி கண்வடித்தாள்
இலவசமாக கிடைத்த அரிசியை அரைத்து முறுக்கு சுட்டு கடைகடையாக போட்டாள் கையில் காசு நடமாடத்
துவங்கியது பட்டுப்போக இருந்த செடி துளிர்விட்டது

குட்டி கதை
ஆபிரகாம் வேளாங்கண்ணி. கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (30-Jul-19, 5:05 pm)
பார்வை : 173

மேலே