கூலிக்காரன் மகன்
கூலிக்காரன் மகன்
~~~~~○~~~~~~~
கூலிக்காரன் மகன் கல்லூரி வாசல் படியேறினான் என்றால் பெருமை படவேண்டிய விஷயம்தான்
கல்லூரி மாணவர்கள் எல்லோரும் பாட சம்மந்தமாக பிக்னிக் போயாக வேண்டும் அதற்காக எல்லோரும் ஜநூறு ரூபாய் கண்டிப்பாக கட்டவேண்டும்
வீட்டு நிலவரம் மோசமாக உள்ளது கல்லூரியில் சேருவதற்கு ஆளப்புடி தேளப்புடி என்று இருந்தது இதில் வேறு
மேற்படி செலவுக்கு கேட்டால் சங்கடப்படுவார்கள் என்று வீட்டில் விஷயத்தை சொல்லவில்லை ஒரு சங்கதியை காதால் கேட்டாலோ கண்ணால் படித்தாலோ மனதில் நிற்காது அதனை செயல் படுத்தி பார்ப்பதைக்காட்டிலும் மனப்பாடம் தக்க சமயத்தில் கைகொடுக்காது என்பது உண்மை அதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டது முடியாதவர் பெயர் நீக்கப்பட்டது
அஸ்வினி வசதி உள்ளவள் அவனின் வீட்டு நிலவரம் அவளுக்கு தெரியும் அதனால் பாத்ரூமுக்கு போக பர்மிஷன் கேட்டுக்கொண்டு வெளியில் சென்றாள்
""அருமைச்செல்வம் இங்கேவா"" என்று சன்னல் வழியாக அவனுக்கு சிக்னல் கொடுத்து வெளியில் அழைத்தாள்
வந்தான் ஜநூறு ரூபாயை அவன் கையில் திணித்து ""பிக்னிக்குக்காக போய் பிரின்ஸ்பால் கிட்ட கட்டு"" என்று கொடுத்தாள்
""அய்யோ வேண்டாங்க இதை உங்களுக்கு திருப்பி கொடுக்க முடியாமல் போயிட்டா நல்லா இருக்காதுங்க ""
""அதைப்பற்றி பிறகு யோசிக்கலாம் முதலில் போய் பணத்தை கட்டு"" என்றாள்
""சரிங்க "" என்று பணத்தை கட்டிவிட்டான் யோசித்தான் ""ஆமாம் இவங்க ஏன் என்னை மட்டும் கூப்பிட்டு பணம் கொடுத்து கட்ட சொல்றாங்க இன்னும் எத்தனையோ ஸ்டூடென்டுங்க பணம் கட்டல அத்தனை பேர்ல எனக்கு மட்டும்... ஒருவேளை கந்து வட்டிக்காரியோ...இருக்கலாம் பணத்தை திருப்ப தாமதிச்சா ஆள வச்சி அடிப்பாளுங்க"" என்று ஞாயிற்றுக்கிழமை லீவு நாள் அன்று ஒரு இரும்பு கடையில் வேலை கேட்டான் அங்கே கம்பிகளை ஏற்றி கொண்டுபோய் இறக்கிவிட்டு வர ஆள் இல்லாமல் தவித்து கொண்டு இருந்தார்கள் இவன் போய் கேட்டதும் சம்மதம் தெரிவித்து செய்ய அனுமதித்தார்கள் நான்கு பேர் செய்யவேண்டிய வேலையை ஆள் கிடைக்காத காரணத்தால் அவன் ஒருவனே செய்யவேண்டி வந்தது கொஞ்சம் நேரம் ஆகிவிட்டது ஆனாலும் கொண்டுபோய் இறக்கியும் விட்டான்
கட்டிடக்காரர் வழக்கம் போல் நாலுபேர் வருவார்கள் ஆளுக்கு இருநூறு ரூபாய் கொடுப்போம் அதனால் நாலு இரண்டு எட்டு நூறு ரூபாயோடு இருநூறு சேர்த்து ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள்
""ஏழுமாடி கட்டிடம் இது அடிக்கடி கம்பி தேவைப்படும்போது வருவோம் பால்மாறாமல் செஞ்சி கொடு அதுக்காக இருநூறு வச்சிக்கோ எஞ்சாய் பண்ணு ஆனால் குடிக்கமட்டும் செய்யாதே"" என்றார்கள், உடம்பு வலி ஒருபக்கம் இருந்தாலும் அதே சமயத்தில் சந்தோஷமும் ஒரு பக்கம் தாக்கு பிடித்துக்கொண்டான் அதில் ஐநூறை அம்மா கையில் உண்மையைச்சொல்லி கொடுத்தான் மாறாக அம்மாவுக்கு சந்தோஷம் இல்லை வருந்தினாள் கண் கலங்கினாள்
திங்கட் கிழமை கல்லூரியில் அஸ்வினி யிடம் நாணயஸ்தன் என்று நிருபிக்கும் வகையில் ரூபாய் ஐநூறை கொடுத்து ""நன்றிங்க "" என்றான்
""அடே பன்றி வந்துட்டான் நன்றி சொல்ல காதலிக்கிறவங்களுக்கு போய் யாராவது நன்றி சொல்லு வாங்களா நான் உன்னை காதலிக்கிறேண்டா அதனால்தான் நான் கொடுத்து உதவினேன் கண்டவங்களுக்கு கடன் கொடுத்து அதை திருப்பி வாங்குகிற கந்துவட்டிக்கு பணம் கொடுக்கிறவ இல்லடா நான் மண்டு உன்னோட கூட நாலுபேர் வெளியே அனுப்பப்பட்டார்கள்
அதில் உனக்குமட்டும் ஏண்டா கொடுத்தேன் மரமண்ட மரமண்ட புரிஞ்சிக்க வேணாமா""
""இல்லங்க நான் உங்கள பார்க்கல காதலிக்கிறீயான்னு கேட்கல பேசல பழகல திடீர்னு நீங்களா முடிவு எடுத்தக்கிட்டா எப்படிங்க ""
""மறுபடியும் இல்லங்க நொல்லங்க அவங்க இவங்கன்னா நோண்டி நுங்க எடுத்துவிடுவேன் ""
""எங்க வீட்ல ""
""அவங்கள நான் பாத்துக்கிறேன் சரியான பயந்தாங்கொள்ளியா இருக்கியே ""
""இல்லங்க இது சரிபட்டு வராதுங்க ""
""ஏன் சரிபட்டு வராது நீ வேற எவளையாவது காதலிக்கிறாயா தூரத்து பச்சை கண்ணுக்கு குளுமையா இருக்கிறதா இது கிட்டத்து பச்சை பாத்து பாத்து போர் அடித்து விட்டதா ""
""அய்யய்யோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லீங்க ""
""அப்படின்னா நான் உன்னை காதலிக்கிறேன் நீயும் என்னை காதலிக்கிறே, இல்ல.... இல்லேன்னா கொண்டேபுடுவேன் ""
""என்னங்க இது அநியாயமாக இல்லீங்களா ""
""ஏன் என்னை உனக்கு பிடிக்கலையா""
""அப்படி நான் சொல்லவே இல்லீங்க அப்படி சொல்லவும் மாட்டேங்க ""
""ஏன்""
""ஏன்னா நம்ம கல்லூரியிலேயே நீங்க ஒண்டி மட்டும் தான் ரொம்ப ரொம்ப அழகாக இருக்கீங்க, தங்கமான மனசு உங்களுக்கு இருக்குங்க உங்க அழகைவிட உங்க மனசு எனக்கு புடிச்சி இருக்குங்க ""
""நீ சும்மா சொல்றே அப்படின்னா நீ என்னையே கலாய்க்கிறே அப்படித் தானே ""
""எங்க அம்மா மேல சத்தியமா சொல்றேங்க ""
""இது என்ன எதுக்கு எடுத்தாலும் ங்கே..ங்கே..ன்னு சொல்லிக்கிட்டு சும்மா
பேரைச் சொல்லியே கூப்பிடு ""
""எனக்கு பயமா இருக்குங்க ""
""பயப்படுற அளவுக்கு நான் ஒன்னும் இந்த நாட்டு இளவரசி இல்லை நானும் எல்லா பொண்ணுங்களைப்போல ஒரு சாதாரன பொண்ணுதான் டேய் நீ ஆம்பளதானே இல்ல ஆம்பள தானேன்னு கேக்கிறேன் இல்லை ஆம்பளைக்கு தகுதியில் லாதவனா இல்லை எனக்கு சந்தேகமா இருக்கு""
""இல்லங்க சத்தியமா நான் ஆம்பளதாங்க ""
""அப்போ நிருபித்து காட்டு ""
""எப்படிங்க நிருபிகிறது ""
"" ஒன்னு பண்ணு....ம்...வேணாம்....
என்னையே கட்டிபுடிச்சி ஒரு முத்தம் கொடு ""
""அய்யய்யோ வேணாங்க அது தப்புங்க அதுவுமில்லாம எனக்கு வெட்கமா வேற இருக்குங்க முத்தம் கொடுத்துக் கிட்டவங்க எல்லாரும் சேர்ந்தே இருப்பாங்கன்னு சொல்லமுடியாது, அது கொடுத்துக்காதவங்க சேர்த்து வாழாம இல்லை அது ஒன்னும் அக்ரிமெண்டு இல்லீங்க அது ஒரு நம்பிக்கை அந்த நம்பிக்கை என்மேல்
உங்களுக்கு இல்லை அப்படித்தானே
அவ்வளவுதாங்க அதுக்காக நான் உங்கள எச்சி பண்றதும் பதிலுக்கு நீங்க என்னை எச்சி பண்றதும் சரியில்லீங்க சிலருக்கு எச்சி நோவே தொத்திக்கிட்டு தொல்லை கொடுக்குங்க ""
""போடாங்..... பொட்டப்பையா"" என்று சொல்லி விட்டு கோபமாக திரும்பி பார்க்காமல் போய்விட்டாள்
""அவளாக வந்தாள் என் இதய கதவை திறந்து உள்ளே நுழைந்து சுற்றி வளைத்து பார்த்தாள் இடம் விஸ்தாரமாக இல்லையோ என்னவோ
இது எனக்கு சரிபட்டு வராது என்று மூடிக்கிட்டு போய் விட்டாள்... ம்.. என் இதயக்கதவை"" என்று அவன் மனது வருந்திற்று
என்ன நினைத்தாளோ திரும்பி வந்தாள் அவனை பிடித்து நச்சுனு ஒன்னு வைத்தாள், வைத்தது அடி உதை அல்ல முத்தத்தை
அதை மாணவர்கள் மற்றும் மாணவிகள் கண்கூடாக பார்த்து வெட்கப்பட்டு தலை குனிந்து ""நம்பள எந்த நாயும் சீண்ட கூட மாட்டேங்குது அவனுக்கு மச்சம் உச்சத்திலே இருக்கு கொடுத்து வைத்தவன்"" என்று மாணவர்கள் வருந்திக்கொண்டார்கள்
அஸ்வினி வீட்டுக்குப்போனாள் ""தங்கம்மா கல்லூரிக்கு போட்டுக்கொண்டு போன துணியை கழட்டி தொவைக்க போட்டு இருக்கேன் என் துணியை நீ தொவைக்காதே நானே தொவைச்சிக்கிறேன் ""
""ஏம்மா நான் சரியா தொவைக்கிறது இல்லையா குளியல் வேற போட்டு இருக்கீங்க எப்பவும் இல்லாமல் இப்போ
என்ன வீட்டுக்கு தூரமா""
""அப்படியில்ல வரும் போது அடியில் ஈரமா தட்டுபட்டது கிட்ட வாயேன் கூலிக்காரன் மகனை கட்டி புடிச்சி முத்தம் கொடுத்துட்டேன் அப்பாகிட்ட போட்டு கொடுத்துடாதே அப்போ ஏற்பட்ட ஈரமா இல்லை பீரியடில ஏற்படும் ஈரமா தெரியல என்னதான் வேலைக்காரியாக இருந்தாலும் மனசாட்சி இடம் கொடுக்கல அதனால நான் தொவைச்சிக்கிறேன்னேன்""
""ம்ம்ம்...நடக்கட்டும் ...நடக்கட்டும் இல்ல அதுமட்டும் தானா...இல்ல ""
"நீங்க நெனைக்கிற மாதிரி இல்லை அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்"
வரும் போது ஹால்ல ஒரே கூட்டமாக இருந்தார்கள் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை யாரையும் கேட்க முடியாமல் தவித்தாள் மெதுவாக வீட்டு வேலைக்காரி தங்கம்மாவிடம் "" பசிக்கிறது"" என்றாள் உடனே தோசைப்போட்டு கொடுத்தாள்
தின்றுக்கொண்டு ""தங்கம்மா யாரு இவங்க எல்லாம்"" என்று கேட்டாள்
""என்னம்மா சின்னம்மா இப்படி கேட்டுபுட்டீங்க உன்னை பொண்ணு பாக்க வந்திருக்காங்க உங்களுக்கு தெரியாதா, உங்களுக்கு சொல்லவே இல்லையா ""
""அப்படியா என்னை கேட்கவும் இல்லை ஏங்கிட்ட சொல்லவும் இல்லையே ஒரு வேளை அவங்களா திடுதிப்புன்னு வந்து இருப்பாங்க இதில் மாப்பிள்ளையாரு ""
""அதோ அந்த ப்பக்கம் திரும்பிக்கிட்டு இருக்கிறாரே சந்தனக் கலர் சொக்கா போட்டவர் அவர்தான் மாப்பிள்ளையாம்""
""அவனா மாப்பிள்ளை ஏங்கூட படிக்கிறவனாச்சே, அவன் சரியான பொம்பளை பொருக்கியாச்சே, அவன் எத்தனையோ தடவை என் பின்னால சுத்தினவன் ஒரு நாள் செருப்பை தூக்கி காட்டினேன் அதை மனசில வச்சிக்கிட்டு என்னை கல்யாணம் பண்ணி பழிவாங்கத்தான் இங்கே பெண் கேட்டு வந்திருக்கான் நான் ஒரு பையனை விரும்புறேன் அவன் ஒரு கூலிக்காரன் மகனா இருக்கிறான் தெரிஞ்சா அப்பா சம்மதிப்பாரா மாட்டாரான்னு தெரியாது இதை நான் அப்பா கிட்ட எப்படி எடுத்து சொல்லுவேன்"" என்று தங்கம்மாகிட்ட பேசிக்கொண்டுருந்ததை அப்பா பொண்ணோட ஜாதகம் எடுக்கவந்தவர் இதை கேட்டுவிட்டார் ஜாதகத்தை எடுக்காமல் திரும்பி வந்து மாப்பிள்ளை வீட்டாருக்கு சொன்னார் ""என்னை மன்னிச்சிடுங்க பொண்ணுக்கு இந்த சம்மந்தத்தில விருப்பம் இல்லீங்க நீங்கள் புறப்படலாம்"" என்றார்
""என்னங்க திடீர்னு நீங்க நகைநட்டு சீர்வரிசை எதுவுமே செய்யவேணாம் எல்லாத்தையும் நாங்களே போட்டு கட்டிக்கிட்டு போறோமுங்க"" என்றார்கள்
""இப்போதைக்கு பொண்ணு படிச்சிக்கிட்டு இருக்கிறாள் படிப்பை முடக்காமல் இது நடக்காது என்கிறாள் என்ன செய்ய ""
""பொண்ணு படிக்கட்டுமுங்க இப்போதைக்கு நிச்சயம் மட்டும் பண்ணிட்டு போயிடுறோம் படிப்பு முடிந்த பிறகு கல்யாணத்தை வச்சிக்கலாம் ""
""அதுக்கு பொண்ணு சம்மதிக்கனும் இல்லீங்களா அவள் மைனர் இல்லை மேஜர் அவள் விருப்பத்துக்கு மாறா செய்தால் அது சட்டப்படி குற்றமுங்க நான் அந்த குற்றத்தை செய்ய விரும்பலங்க அவள் என்மகளாக இந்தால் என்ன அவள் மைனராக இருக்கும் வரை அவளை பராமரிக்கும் அதிகாரம் எங்களுடையது, அவள் மேஜரானபிறகு அதிகாரம் அவளுடையது நாங்கள் அதில் தலையிட எங்களுக்கு அதிகாரம் கிடையாது, மைனராக இருக்கும்வரை அவளை நாங்கள் காப்பாற்றினோம் அவள் மேஜரான பிறகு எங்கள் மானம் மரியாதை எல்லாத்தையும் அவள் காப்பாற்றுவாள் தயவு செய்து புறப்படுங்க அவள் ஒரு கூலிக்காரனை காட்டினாக்கூட அவள் விருப்படிதான் நடக்கும் ப்ளீஸ் ""
அஸ்வினி க்கு ஆச்சரியமாக இருந்தது தங்கம்மாகிட்ட பேசிக்கொண்டிருந்ததை அவர் கேட்டுக்கொண்டு இருந்தார் என்பது அஸ்வினி க்கும் தங்கம்மாவுக்கும் தெரியாது அதனால் ஆச்சரியமாக பார்த்தாள் ஓடிவந்து அப்பாவை கட்டிப்பிடித்துக் கொண்டு ""தேங்யூப்பா"" என்று கண்கலங்கினாள்
""இந்த சம்மந்த்தில விருப்பம் இல்லன்னு பொண்ணுவாயால சொல்லச் சொல்லுங்க நாங்க போயிடுறோம் ""
அஷ்வினி அதைக்கேட்டுவிட்டு அவர்கள் எதிரில் வந்து நின்றாள் ""அப்பா கொஞ்ச நேரம் உள்ளே போறீங்களா நான் கொஞ்சம் அவங்களுக்கு புரியிற மொழியில் பேசனும் ப்ளீஸ் அப்பா"" என்றதும் அப்பா உள்ளே போனார் போனதும் கதவை மூடிக்கொண்டாள்
""சரி உன் கண்டிஷன் என்ன அதைச்சொல்லுமா""
""நான் ஒரு பையனை காதலிக்கிறேன் அவன் தான் எனக்கு எல்லாமும் என்றிருக்கிறேன் அவனைவிட்டு என்னால இருக்க முடியாது இப்போ என்ன உங்க பையனை கட்டிக்கனும் அவ்வளவுதானே சரி கட்டிக்கிறேன் உங்கபையனை கட்டிக்கிட்டதுக்கு பிறகு நான் விரும்புகிற அவன் என்னை சந்திக்க வருவான் உங்களால் இடைஞ்சல் உருவாகக்கூடாது அவனால் வரமுடியலன்னா நான் அவன் இடத்துக்கு போவேன் என்னை போவக்கூடாதுன்னு தடுக்கக்கூடாது நாங்க என்ன வேணுமுன்னாலும் செய்வோம் கேக்கக்கூடாது எப்படி வேணுமுன்னாலும் இருப்போம் டிஸ்டர்ப் பண்ணக்கூடாது இதுக்கு சம்மதமுன்னா ஒரு ஸ்டாம்பு பேப்பர் எழுதி கையெழுத்து போட்டு கோர்டுல நோட்டரி பண்ணி கொடுங்க உங்க ஆளை கட்டிக்க சம்மதிக்கிறேன்"" என்றாள்
பையனோட அப்பாவும் அம்மாவும் இன்னும் இருந்த உறவினர்களும் கொதித்தெழுந்து ""ஏண்டா உனக்கு இவளைவிட்டா வேற பொண்ணே உன் கண்ணுக்கு தென்படவில்லையா எந்திரிடா ""
இரண்டு நாள் விட்டு பெண்பார்க்க வந்தவன் கூலிக்காரன் மகனை மிரட்டினான் ""அஷ்வினிக்கிட்ட நீ பேசக்கூடாது நான் அவளை கல்யாணம் பண்ணிக்கப்போறவன் மீறி பேசினால் கல்லூரி படியேற விடமாட்டேன்"" என்று கூறிவிட்டு புறப்படும் போது ஆஷ்வினி கவணித்துக்கொண்டிருந்தாள்
அவர்கள் கொஞ்சம் தூரம் போகவிட்டு
கையை தட்டி சொன்னான் ""அவள கல்யாணம் பண்ணப் போறவன்னு நீயே சொல்லிக்கிறது இல்லை அதை அவ வாயால அவள் சொல்லனும் நான் அவளின் காதலன் அவள் என் காதலி இதை இப்போ என் வாயால் நான் சொல்லிட்டேன் சமயம் வரும் போது இதையே அவள் வாயால சொல்லுவா அதுவரை காத்திரு கல்லூரி என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா படியேற விடமாட்டேன் என்கிறே அதையும் பாத்துக்கலாம் "" என்றான்
குறுக்கிட்டாள் ""அருமை செல்வம் என்ன அவனுங்க வந்து உன்னை மிறட்டுறானுங்களா ஆமாம் இந்த தைரியத்தை எங்கே எப்போ எந்த கடையில வாங்கினே இப்போத்தான் நீ கில்லிடா இல்லை இல்லை கில்லி இல்லை நீ டில்லிடா நீ வச்சது சவால் இல்லை அவனுக்கு கொள்ளிடா"" என்று புகழ்ந்து தள்ளினாள் அம்புட்டு சந்தோஷம் அவளுக்கு
""ஆமாங்க உங்க கூட பேசக்கூடாதாம் பேசினா கையை காலை உடைத்து கல்லூரி படியேறாம பண்ணிடுவேன் என்றார்கள் இது எனக்கு தேவைதானா ""
""டேய் பின்னால் அவ இவன்னு பேசறது
முன்னால ங்க..ங்க..போடுறது எப்படிடா இந்த தைரியம் வந்தது ""
""அன்னைக்கு என்னை பொட்டப் பையான்னு சொன்னதும் எனக்கு இரவு பகலா தூக்கம் இல்ல போயும் போயும் ஒரு பொட்டச்சி என்னை பார்த்து பொட்டப்பையான்னு சொல்லிட்டாளே நாம அநியாயத்துக்கு சாதுவா இருந்ததினாலத்தானே இப்படி சாதுவா இருந்து என்னத்தை நீ கிழிக்கப் போறேன்னு என்மனமே என்னை காரி கொத்தா முகத்தில் துப்புச்சி ""
""துடைச்சிக்கிட்டீயா ""
""அதை தொடைச்சிக்கிட்ட நொடியில நரம்பெல்லாம் முறுக்கேறிடுச்சி""
""எதையும் தாங்கும் இதயம் வந்துடுச்சா ""
""இல்லை எதையும் எதிர்க்கொள்ளும் தைரியம் வந்துட்டது இனி நீங்க தனியாக வெளியில் போறது வர்றது என்பது கூடாது நீ ஒரு நாள் செருப்பை கழட்டி சகமாணவர் மாணவியர் முன்னாடி அவனை காட்டியது அவன் இதயத்தில் முள்ளு தச்ச மாதிரி இருக்கு உன்னை பழிதீர்க்கவே இப்படியொரு நாடகத்தை அரங்கேற்ற ப்ளான் பண்ணியிருக்கானோ எனக்கு சந்தேகமா இருக்கு ஜாக்கிறதை ""
""அய்யோ.. நான் என்ன நினைத்து இருந்தேனோ அதையே நீயும் சொல்றேடா.... சரிங்க காதலரே நான் ஜாக்கிரதையாக இருக்கிறேனுங்க ""
""இது விளையாட்டு இல்ல நான் வரறேன்""
வீட்டுக்குப்போனான் அப்பா கிணறு வெட்டும் வேலைக்கு போய் இருந்தார்
இருபதடி ஆழம் உள்ளே அருமை செல்வனின் அப்பாவை சேர்த்து மொத்தம் ஆறுபேர் கிணறு சரிந்து பத்தடி வரை மூடிக்கொண்டது அதிலே ஆறுபேரும் உயிரிழந்தார்கள் மண்ணை அள்ளும் உபகரணங்கள் இல்லாத காரணத்தால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை கரைகள் மேலும் வீரல் விட்டு இருந்தமையால் யாரும் உள்ளே இறங்கி மண்ணை அப்புறப்படுத்த பயப்பட்டார்கள் பின் கட்டிட வேலக்கு சாரம் கட்டும் மரங்களை கொண்டுவந்து மீண்டும் மண் சரியாதபடிக்கு செய்து ஊர் ஜனமே உதவியது பின் ஆறு உடலையும் மீட்டு அவரவர் வீட்டுக்கு கொண்டு சென்றனர் ஒரு கட்டிலில் கிடத்தி இருப்பதை கண்ட மகன் மயக்கம் போட்டு விழுந்தான்
கணவரின் பிணம் வீடுவந்ததுமே மனைவி கோமா ஸ்டேஜிக்கு போய்விட்டாள் அக்கம் பக்கம் இருந்தவர்கள் மற்றும் பட்டும்படாமலும் தொட்டும் தொடாமலும் இருந்த உறவினர்கள் ஒன்று கூடி இறந்தவரை அடக்கம் செய்தனர்
கோமாவில் கிடந்த அம்மாவுக்கு அன்னம் தண்ணி ஆகாரம் உள்வாங்க முடியாமல் இருபத்து ஓராம் நாள் அம்மாவும் உயிரை விட்டார்கள் அதே அக்கம்பக்கம் உள்ளவர்களும் மற்றும் உறவினர்களும் முன் நின்று அடக்கம் செய்தனர்
பையன் அனாதை யாகிவிட்டான் கல்லூரி படிப்பு தடைபட்டு விட்டது வீடு ஒன்றுமட்டுமே அப்பா அம்மா சம்பாதித்து வைத்த சொத்து
பையன் வயிற்றுக்கு இரைதேட அதே இரும்பு கடைக்குப்போனான்
அஸ்வினி காதலன் கல்லூரிக்கு வராததைவைத்து விசாரிக்க வீட்டுக்கு போனாள் அங்கே உள்ளவர்கள் இரும்பு கடையில் இருப்பதாக சொன்னார்கள்
நேராக இரும்பு கடைக்கு அப்பாவை துணைக்கு அழைத்துப்போனாள் தனியாக வெளியில் போக வேண்டாம் என்று காதலன் சொல்லியிருந்ததை நினைவில் கொண்டு அப்பாவை துணைக்கு அழைத்துப்போனாள்
இரும்புக்கடை அஷ்வினியின் சித்தப்பாவின் கடை இது என் சித்தப்பாவோட கடையாச்சே இங்கா வேலைசெய்கிறான் சித்தப்பாவிடம் கேட்டாள் °° சித்தப்பா இங்கே அருமைச்செல்வம் என்பவர் வேலை சய்கிறாராமே இப்போது அவரை எங்கே பார்க்கமுடியும் °° என்று கேட்டாள்
""ஏம்மா என்ன விஷயம் ""
""சித்தப்பா அவர் என் கூட கல்லூரியில் படித்துவந்தவர் திடீர்னு ஒருமாதமாக அவர் கல்லூரிக்கு வருவதே இல்லை எனக்கு பழக்கம் உள்ளவர் என்பதால் கல்லூரி பிரின்ஸ்பால் விசாரித்து வரச்சொல்லி என்னிடம் சொன்னார் அவர் வீட்டுக்கு போனேன் அவரோட அப்பாவும் அம்மாவும் இறந்து போய்விட்டதாக சொன்னார்கள் அவர் இங்கே வேலை செய்வதாகவும் சொன்னார்கள் அதனால் ""
""கல்லூரி படிப்பு படிக்கிறவனா அவன் ஏங்கிட்டே சொல்லவே இல்லையம்மா தெரிந்திருந்தால் இங்கே கணக்கு வழக்கு பார்க்க ஒரு ஆள் தேடிக்கொண்டு இருக்கிறேன் இப்படின்னு தெரிந்து இருந்தால் கணக்கு வழக்கை பார்க்கச்சொல்லி வச்சிருப்பேனம்மா இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகவில்லை அவன் கோடோனில் இருப்பான் இப்போ சாப்பாட்டு நேரம் சாப்பிட போய் இருக்கிறானா இல்லை கோடோனில்தான் இருக்கிறானான்னு பாரும்மா"" என்றார் சித்தப்பா
தலைவிரி கோலம் துணி ஒரு வேஷமுமாக கோடோனுக்கு வெளியில் ஒரு மரத்து நிழலில் அமர்ந்து இருந்து ஏதோ சிந்தனையில் இருந்தான்
""அருமைச்செல்வம்"" என்று குரல் கொடுத்தாள்
சடாலென திரும்பிப்பார்த்தான் அஷ்வினி நின்றிருப்பதை அவளைப்பார்த்ததும் கண்களில் கண்ணீர் சுரப்பெடுத்தது
அதைப்பார்த்ததும் அவளுக்கும் கண்கள் கலங்கிற்று அவன் கையை பிடித்து அழைத்துப்போனாள் சித்தப்பாவிடம்
""ஏம்பா நான் ஒரு பட்டதாரின்னு ஏங்கிட்ட சொல்லவே இல்லையப்பா சொல்லியிருந்தால் கணக்கு வழக்கு பார்க்க ஆள்கிடைக்காமல் இருந்த எனக்கு அந்த கவலை தீர்ந்து இருக்குமேப்பா என்னப்பா நீ நாளையில் இருந்து இல்லை இன்னையில இருந்து இல்லை இல்லை இப்பத்தில் இருந்து நீதான் என்னோட கணக்கு பிள்ளை"" என்றார் அஷ்வினியின் சித்தப்பா
""சித்தப்பா இவரை ஒரு ஒருமணிநேரம் எங்கூட அழைச்சிட்டு போய் உங்க கணக்கு பிள்ளையா கொண்டுவந்து நிறுத்துகிறேன் சித்தப்பா ""
""சரிம்மா""
முடி வெட்டும்இடத்தில் முடிவெட்ட வைத்தாள் பிறகு குளிக்கவைத்தாள் ரெடிமேடு துணிக்கடைக்குப் போனாள் துணிகளை மாட்டிவிட்டாள் ஷூஸ் எல்லாம் வாங்கிப்போட்டு முற்றிலும் மாற்றி சித்தப்பாவிடம் கொண்டு போனாள் "" சித்தப்பா கையால் எழுதுவது எல்லாம் மூட்டைகட்டி வச்சிட்டு கணினி வாங்கித்தாங்க அவருக்கு எல்லாம் தெரியும்"" என்றாள்
""அப்படியாம்மா இதோ ஒருமணி நேரத்தில் வரவச்சிடுறேன்
எனக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு நோட்டு போட்டு அதை தேடிபிடிக்க சிரமமாக இருக்கிறதுதான்
நல்ல யோசனைம்மா ஏம்மா நீ தனியாகவா வந்தாய் ""
""இல்லை சித்தப்பா அப்பா கூடத்தான் வந்தேன் வரவழியில ஒரு போன் வந்தது அவரோட அலுவலகத்தில் கூட வேலை செய்பவர் தவரிட்டாராம் லேண்டு லைன்ல போட்டு பாத்து இருக்காங்க யாரும் எடுக்காதததாலே பக்கத்து வீட்டு காரர்கிட்ட ஆளை அனுப்பி நாங்க வந்தா சொல்லிச் சொல்லி போயிருக்காங்க, அதனால் பக்கத்துவீட்டுக் காரருங்க சாவு விஷயமா இருக்குன்னு கைப்பேசியில பேசி இருக்கிறார் நான் தான் சொன்னேன் அப்பா நீங்கபோங்கப்பா என்று அனுப்பிவிட்டு வந்தேன் சித்தப்பா ""
""அப்பாவுக்கு நீ இங்கே இருக்கிறது தெரியுமா இல்லேன்னா போன் போட்டு சொல்லிவிடும்மா அப்புறம் அவர் அங்கே இங்கே உன்னைத்தேடி அலையப்போறார் ""
""சொல்லிவிட்டேன் சித்தப்பா ""
""காலம் கெட்டுக்கிடக்கிறது அதான்""
அதற்குள்ளாக கம்ப்யூட்டர் வந்து அஸம்பல் ஆகிவிட்டது
அருமைச்செல்வம் வேலை செய்துக்கொண்டே படிப்பை முடித்தான்
அஸ்வினியின் சித்தப்பாவுக்கு ஒருமகள் அவளை அருமை செல்வத்திற்கு முடிச்சி போட யோசித்தார் அவளை கடைக்கு வரவழைத்து ""தம்பி இவளுக்கும் அந்த கணக்கு வழக்குகளை சொல்லிக்கொடு"" என்று சொன்னார் இப்படியாக பழகிவிடுவார்கள் காதல் உருவெடுக்கும் கல்யாணத்தை முடித்துவிடலாம் நமக்கும் வயதாகிவிட்டது கடையை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தார்
அவர் யோசனையில் மண் விழுந்தது அவரின் மகள் ரவுடியின் மகனை காதலிக்கிறாள் அவனைதாதான் கல்யாணம் பண்ணிக்கொள்வதாக முடிவில் இருந்தாள் அப்பா சம்மதிக்க மறுத்தால் ஓட்டம் பிடிப்பதாக திட்டம் போட்டு வைத்திருந்தாள்
ஆண்வாரிசு கிடையாது ஒரே மகள் என்பதாள் வீடு வாசல் கடை முதல் கொண்டு எல்லாம் மகள் பெயரில் தான் இருக்கிறது
சித்தப்பாவின் மகள் அருமைச்செல்வத்தின் மேல் பொய்யான வதந்திகளை சோடித்து அவனை கடையைவிட்டு தூக்கிவிட்டாள் ரவுடியின் மகனை கொண்டுவந்து அருமைச்செல்வம் இடத்தில் உட்காரவைத்தாள்
இதுவிஷயம் அஷ்வினியின் காதில் விழுந்தது அவள் தனது அப்பாவிடம் சொல்லி வேறு இடத்தில் ஒரு இரும்புகடையை திறந்து வைத்தாள் கட்டிடத்திற்கு தேவையா எல்லா பொருள் களும் அங்கே கிடைக்குப்படி செய்தாள்
இங்கே இருந்த கஸ்டமர்கள் அங்கே மாறினார்கள் சின்ன கடைகள் எல்லாம் காலியாகிவிட்டது இங்கே ஏறுமுகம் அங்கே இறங்கு முகமாக இருந்தது
அஷ்வினியின் சித்தப்பாவுக்கு அவரின் மகள் மேல் கடுப்பாகி அவள் மேல் எழுதப்பட்டிருந்த எல்லா சொத்துக்களையும் தன்பேரில் மாற்றிக்கொண்டுவிட்டார் அவை அனைத்தையும் ஒரு ரவுடிப்பையன் சுருட்டுவதைவிட அனாதையாக வாழ்வோரை போய் சேரட்டும் என்று எழுதிவைத்துவிட்டார் ஒரே ஒரு நெஞ்சிவலி உயிரைவிட்டார் அவர்மகளை ரவுடியின் மகன் கிடைந்தவரை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்துவிட்டான் மகளும் அனாதை யாகிவிட்டாள் தற்போது அஷ்வினியின் பாதுகாப்பில் இருக்கிறாள்
அஷ்வினியின் கணவனாகிவிட்டான் அருமைச்செல்வம் ஆஸ்திக்கு ஒன்னு ஆசைக்கு ஒன்னு பெற்றுக்கொண்டு
வண்டி ட்ராபிக் இல்லாமல் சரலமாக ஓடிக்கொண்டே இருக்கிறது.
□
ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்