மறுப்பு தெரிவித்தவன்

கடவுளை மறுத்தானோ அது கடமையென நினைத்தானோ
கடமை மறந்த மானிடரை கடமையாற்ற செய்தானோ
உடமைகளை இழந்து செய்யும் பரிகாரத்தை வெறுத்தானோ
உண்மை இல்லாததில் ஊறிப்போவதை உறுதியாய் தடுத்தானோ

கடவுள் தம் பெயராலே கெடுதல் நடப்பதையே தடுத்தானே
கண்டபடி செய்யுகின்ற துர் வழிபாட்டை பழித்தானே
மனிதரை புனிதமாக நடத்துவதை கெடுத்தானே
எல்லோரையும் சமமாக நடத்தாததை கண்டித்தானே

இவன் மீது சீற்றம் கொண்டோர் எட்டுத்திக்கும் எழுச்சியுற
இடியென வசைபாடி இம்சை பல செய்துவைக்க
இவன் பார்வை திரும்பியது உருவாக்கிய இறையை நோக்கி
இதுவே இவனை இன்றளவும் இட்டுச் சென்றது சிகரம் நோக்கி

ஈரோட்டில் ஈன்றெடுத்த இந்நாட்டின் முத்து அவனே
ஈரேழு பிறப்பு எடுத்தும் எம் துயரை களைய வருவான்
ஈட்டிபோன்ற சொல்லாலே எவரிடமும் தர்க்கம் செய்வான்
ஈன மொழியென்று இகழ்வோரை என்றும் அழித்தொழிப்பான்.
------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (31-Jul-19, 3:52 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 1705

மேலே