சொன்னதெல்லாம் நடந்தது

ஐந்தாம் வகுப்பில் நான்
இரண்டு முறைத் தோல்வி
ஆருடம் பார்ப்பேன் நான்
அதை எப்படி கற்றேன் என
கேட்காதீர் எதிர் கேள்வி

எல்லாவித நபர்களும்
என்னிடம் வரிசையில்
ஆளுக்கொரு கோரிக்கையோடே
சொன்னதெல்லாம் நடந்தது
செல்வமாய் குவிந்தது

ஆறு கோயில்கள் கட்டினேன்
அதனூடே ஏழு பள்ளிக்கூடம் வாங்கினேன்
ஐந்து மருத்துவமனைக்கு நிர்வாகி நான்
எட்டுத் தொகுதி என் கட்டுப்பாட்டில்
எல்லாம் என் திறமையால்

இனி வருங்காலத்தில் நானே கடவுள்
என்னை வகுப்பில் கண்டித்த ஆசிரியர்
எனது உரைக் கேட்கும் சீடர்
எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும் கூ ட்டம்
என்ன பெரியார் என் முன் வெறும் சிலையே
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (31-Jul-19, 7:28 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 70

மேலே