காதல்

நிலைக்கண்ணாடி முன் நான்
என்னை முழுவதும் பார்த்த நான்
என் மனத்தைக் கேட்டேன், 'மனதே
என்னுள் இருக்கும் என்னவன் எங்கே
அவனைக் காட்ட மாட்டாயா' என்று
'இதோ நான்' என்று குரல் கேட்க
என் பின்னால் அவன் …...இதோ நான்
உன் உள்ளத்திலிருந்து வெளியே வந்திருக்கிறேன்
நீ காண ' என்றான் …...ஓ, அப்படியா
மகிழ்ந்தேன் நான் என்று கூறி மீண்டும்
கண்ணாடியில் பார்க்க அவன் இல்லை
என்னுள்ளத்தில் ஏதோ ….. புரிந்தது
மீண்டும் அவன் உயிராய் என்னுள் புகுந்தான்
ஈருயிர் ஓர் உடல் தத்துவம் தெளிவானது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Aug-19, 9:38 pm)
Tanglish : kaadhal
பார்வை : 325

மேலே