கோடி கண்கள் வேண்டும்
கோடி கண்கள் வேண்டும் 🌹
மான் விழியாளே
மயக்கம் பார்வையாளே
மங்கை அவள் என்னை சிறை பிடித்தாள்
அவளிடம் சிக்கியது என் மனம் மட்டும் அல்ல
என் இதயமும் தான்.
ஆயிரத்தில் ஒருத்தி அவள்
ஆக பெரிய அதிசயம் அவள்
ஆகாயத்தில் இருந்து வந்து விழுந்த ஜொலிக்கும் நட்சத்திரம் அவள்
ஆனந்த கூத்தாடும் வண்ண மயில் அவள்
ஆஹா அழகின் உச்சம் அவள்.
சின்ன சிறிய குளத்தினிளே ஆனந்தமாக நீந்தும் துள்ளும் வண்ண மீண்கள் அவள் கண்கள்.
பெளர்ணமி நிலவு பிரகாசமான அவள் முகம்.
சிகப்பு ரோஜா இதழ்கள்
அவள் உதடு.
வெள்ளிரி பழம் பளந்த வென்னிற விதைகள்
அவள் சிரிப்பு.
கொடி இடை அல்ல, நூல் இடையும் அல்ல
கண்ணுக்கு தெரியாது இறைவன் அவள் இடை.
பளிங்கு மேனி
அற்புத வடிவம்
வசீகர பார்வை
நாட்டிய நடை
அலங்கார தேர்
கோடி கண்கள் வேண்டும் அவள் அழகை ரசிப்பதற்கு.
- பாலு.