யாதுமாகி -9

அலங்காரம் இல்லாமல்
இரண்டும்
புள்ளிகள் வைத்து
இரண்டுமாக
பீங்கானில் நான்கும் !

பகுதி பகுதியாக
பிரித்து
பிளாஸ்டிக்கில் மூன்றும் !

சிறிதும் பெரிதுமாக
எவெர்சில்வரில் ஆறும்!

இருக்கும் தட்டுகளை
வேளைக்கொன்றாய்
எடுத்து வைத்து
வெறித்த
வண்ணம் சாப்பிடலாம் !

எனக்கு நான்
பேசியபடி
போகிறது
உள்ளம் தாங்கா
வெள்ளமென
தனிமை !!!
- பாவி

எழுதியவர் : பாவி (3-Aug-19, 8:07 am)
பார்வை : 2819

மேலே