பரிசு
உன்னை பார்த்த தருணத்தில் தோன்றவில்லை,
உன்னோடு பழகிய தருணத்தில் ஏற்படவில்லை,
உன் முதல் முத்தம் ஏதோ உணர செய்தது,
உன் வார்த்தைகள் உன் உள்ளத்தை உணர செய்ததாக நினைத்தேன்,
உன் பரிசு அதை உறுதிப்படுத்தியது,
உன்னை நினைத்து என்னை மறக்க துவங்கினேன்,
இது என் தவறா என்றேன்,
ஆம் உன் தவறுதான் என்றாய்,
இப்போதும் எனக்கு பரிசளித்திருக்கிறாய்,
என் மகிழ்ச்சியை எடுத்துவிட்டு வலிகளையும் கண்ணீரையும்...