ஆசை

உன் விரல் பிடித்து நடந்திட ஆசை,
உன் தலை கோதிட ஆசை,
உன் காதுகளை செல்லமாய் திருகிட ஆசை,
உன் கண்களை இமைக்காமல் பார்த்திட ஆசை,
உன் மூச்சுக் காற்றை உள்வாங்கி சுவாசித்திட ஆசை,
உன் இதழ் புன்னகையில் மயங்கிட ஆசை,
உன் தோள் சாய்ந்து ஆறுதல் தேட ஆசை,
உன் மார்பில் தலை சாய்த்து இதய இன்னிசை கேட்டிட ஆசை,
உன் மடியில் தலை வைத்து உறங்கிட ஆசை,
உன்னை கட்டியணைத்து முத்தமிட ஆசை,
இவை வாழ்வின் இறுதி வரை கிடைக்க ஆசை,
கிடைக்காதென்றால் கிடைக்கும் தருணத்திலேயே என் உயிர் பிரிந்திட ஆசை...

எழுதியவர் : பா. ஆனந்தி (6-Aug-19, 10:39 am)
சேர்த்தது : aananthi dharani
Tanglish : aasai
பார்வை : 320

மேலே