மண் குதிரைகள்
மண் குதிரைகள்
அன்பான மனைவி
ஆசையாய் பிள்ளைகள்
கை நிறைய பணம்
ஆடம்பர வாழ்க்கை
வளமான வாழ்வு
வானிலையில் மாற்றம்
வயதினிலும் மாற்றம்
தோற்றத்திலும் மாற்றம்
உடல் செயல் படுவதிலும்
தடு மாற்றம்
இதனால் உறவுகளில் பல மாற்றம்
அதனால் மனம் அடைந்தது பெரிய ஏமாற்றம்.
ஆர்பரித்த ஆளுமை அடங்கிவிட்டது
முன்னேறி சென்ற கால்கள் முடங்கி விட்டது
வாசிக்க படாத புத்தகமாக
வாசனை இழந்த வாடிய மலராக
உதிர்ந்த பழுத்த இலையாக
பலர் காலில் படும் சருகாக
சுவாசம் காற்றில்
கரைந்து விட்டது.
- பாலு.