அச்சம் தவிர்
அச்சம் தவிர்
அச்சம் தவிர் உச்சம் தொட
கோழை அல்ல உயிரை விட
கொட்ட கொட்ட குனியாதே
வளைந்து போ நீ உடையாதே
நிரந்தமில்லா வாழ்வு இது
வேடிக்கை பார்க்கும் உலகமிது
உன்னை நம்பி பாதை கட
உன்னை வெல்ல யாருமில்ல
கிளையை நம்பி யாருமில்லை
உன்னை நம்பின் தோல்வியில்லை
அடிமையாய் வாழ்வது வாழ்க்கை இல்லை
அன்பை விதைப்பது பாவமில்லை
நாடகமேடையில் நடிகர்களாய்
நாளும் நல்லா நடிக்கின்றோம்
பதவி பணம் சேர்த்திடவே
வேஷ கோஷம் போடுகின்றோம்
உனக்கு நீயே பிரம்மனாகு
எதிர்ப்பவனுக்கு எமனாகு !
மு. ஏழுமலை