பெருமை சேர்க்கும்

தேடி வரும் சிறு பிள்ளை போல
ஓடி வந்து கரை தொட்டு
வாடி திரும்பும் கடலலைகள்
வருந்தாமல் இருக்குமா?
விட்டதுண்டா விடாமுயற்சியை?

இருந்தாலும் நாம்
இன்றைய குழந்தைகளுக்கு
வழிவழியாய்க் கற்று தருவது,
வாழ்க்கை பயணத்திற்கு
விடாமுயற்சி முக்கியமென்று

உண்மை தான் அது,
கடலன்னைக்கு சாவேது?
கலங்காதவள் ஒரு நாள்
சுனாமியை துணைக்கழைத்து
அலைகளைக் கரையேற வைப்பாள்

பாசமுள்ள நமது அன்னையை
பறிகொடுத்தபின்
எங்குபோய் தேடுவது?
ஏதானாலும் விடாமுயற்சி
ஏற்றம் தரும், பெருமை சேர்க்கும்

எழுதியவர் : கோ. கணபதி. (11-Aug-19, 4:24 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : perumai seerkum
பார்வை : 75

மேலே