அதை ஏன்பா கேட்குற
உன்னை விட்டால் யாருமில்லை எனக்கு!
யோவ்! அதெல்லாம் அந்த காலம்.
காலையில் கணேஷ்!
மதியத்தில் மகேஷ்!
மாலையில் மாதேஷ்!
இரவில் ஒரு ஈளிச்சவாயன்!
இது தான் இந்த காலம்!
காலம் கெட்டுபோச்சு!
கோலம் மாறி போச்சு!
சகோதரப் பாசமும் சந்தேகத்திற்குள்ளாகலாச்சு!
தாயின் மார்பிள் குழந்தை பால் உண்பதெல்லாம் அநாகரீகமாச்சு!
புட்டி பாலே இன்றையா போதையாச்சு!
நோய் எதிர்ப்பு சக்தியின்றி மருத்துவமனை நெறைஞ்சு போயாச்சு!
குழந்தை பிறந்துமே தொடுதிரை கைப்பழக்கமாகியாச்சு!
கண்டபடி கண்டதையும் கண்களால் மேய குழந்தை வளரலாச்சு காமுறு ஐந்தறிவியாய்!
படுக்கையறை திரைப்படமாக்கி அதுவே கலை என்றாச்சு!
இளவயதினரின் இரவுகளெல்லாம் படுக்கையறை கனவுகளால் நிறைஞ்சு வழியலாச்சு!
எந்த சேனல் பார்த்தாலும் அந்தரங்கமெல்லாம் வெட்ட வெளிச்சமாச்சு!
இரவு பதினொரு மணிக்கெல்லாம் குதிரை சக்தி லேகியம் விற்பனையாச்சு ஆணும் பெண்ணும் புணரும் காட்சிகளோடு!
வெறி பத்தாது, வெறியேற்ற மருந்து தயாரிக்கப்படலாச்சு!
பணம் பறிக்க கண்டதையும் பொறுக்கி சந்தைக்கடையென மனித சமுதாயம் மாறலாச்சு!
அரசாங்கமும் கூட்டத்தோடு கோவிந்தாப் போடலாச்சு!
நீதித்துறை நலிவடைஞ்சு கள்ளக்காதல் குற்றமில்லை என்றே நாசமாயிடுச்சு!