அன்னையின் தரிசனம்
அன்னையின் தரிசனம்
அன்னை அவள் அழகினை கண்களால் கண்டுகளிக்கும் வேளை
ஆழ்மனதில் அவளை அமரச்செய்து மேடையமைக்கும் வேளை
இன்பமுடன் அவள் இதயக்கமலத்தில் பதியும் அந்த இனிய வேளை
ஈன்றவளின் கருணைகொண்ட பார்வையால் அவள் என்னை நோக்கும் அவ்வேளை
உள்ளத்தில் உண்டான உணர்ச்சிகள் கண்களை கலங்கச் செய்த அந்த வேளை
ஊமையாக்கி என்னை உறைய செய்த அந்த தெய்வீக வேளை
என்னையும் அறியாமல் நான் என்பதை மறந்த அந்த இன்ப வேளை
ஓங்காரம் என்னை ஆட்கொண்ட அந்த திவ்ய வேளை
உணர்ச்சிகளை அடக்க முடியாமல் அழுத அந்த வேளையைக்
கூற வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன்