தரணி போற்றும் தமிழே
தமிழர்களே தமிழில் பேசுவோம்
தமிழர்களே தமிழில் எழுதுவோம்
தமிழ் நம் தாய்மொழி
தமிழ் நம் உயிர்மொழி
தன்னிகரில்லா தேன்மொழி
தரணியில் நிறைந்த செம்மொழி
கல்தோன்றி மண் தோன்றாக்
காலத்து மூத்த முதுமொழி
உலக மொழிக் கெல்லாம்
முதல்மொழி தமிழ்மொழி
இமயம் தொட்டு செழித்த
பெரும் மொழி
கங்கை வரை விரிந்து
வரலாறு படைத்த மாமொழி
கடலும் கடந்து கொடிநாட்டிய
கவின் மொழி
கற்போர் இதயமெல்லாம்
கவர்ந்திட்ட பொன்மொழி
அகத்தியம் தொல்காப்பியம்
தழுவிய நம் மொழி
இலக்கியச் செழுமை
நிறைந்த நன்மொழி
பக்தி பல்கலை புரட்சியும்
தொடுத்த வண்மொழி
புதுயுகம் காணப்
புறப்பட்டப் பொதுமொழி
ஓலைச்சுவடியிலும் கல்லிலும்
பொதிந்த தொன் மொழி
அச்சும் கடந்து
கணினியில் நிறையும் நிறைமொழி
தரணியில் வாழும்
தமிழர் நாமெல்லாம்
தண்டமிழை தடையின்றி பேசாவிடில்
தமிழன்னைக்கு நாம் செயும் தீங்கன்றோ!!
தமிழில் பேசுவோம்
தமிழில் எழுதுவோம்