கண்ணீர் மேகங்கள்

கண்ணீர் மேகங்கள்

மழை என பாசம் பொழிந்த பெற்றோர்கள்
இன்று முதியோர் இல்லங்களில்.

உலகமே பிள்ளைகள் தான் என்று நம்பி இருந்த பெற்றோர்கள்
முதியோர் இல்லத்தில்.

வாயை கட்டி, வயத்தை கட்டி, சொத்து, பத்து எல்லாம் விற்று படிக்க வைத்த பிள்ளைகளின்
கைங்கறியம் அவர்களுடைய பெற்றோர்கள் இன்று முதியோர் இல்லத்தில்.

ரத்தத்தை பாலாக கொடுத்து,
ஊட்டி, ஊட்டி வளர்த்த அம்மா, எதையுமே அனுபவிக்காமல் தன் பிள்ளைகளின் எதிர்காலம் தான் முக்கியம் என்ற கருதிய அன்பான அப்பா, இந்த தியாக உள்ளங்கள் இன்று முதியோர் இல்லத்தில்.

பிள்ளைகளே அப்படி என்ன உங்கள் சுதந்திரத்தை உங்கள் பெற்றோர்கள் கெடுத்து விட்டனர்.

அப்படி என்ன உங்கள்
செயல்களுக்கு அவர்கள் குறுக்கே
நின்றுவிட்டார்கள்.


உங்களை உலகுக்கு அறிமுகப்படுத்திய அந்த தெய்வங்களுக்கு உங்களின் வழிபாடு முறை இது தானா.

அவர்கள் சுதந்திரமாக
சுகமாக, சகலவசதிகளுடன் முதியோர் இல்லத்தில் இருக்கிறார்கள் என்று நீங்கள் எனக்கு பதில் கூற வருகிறீர்கள், மருத்துவமனையில் இருப்பதற்கும், வீட்டில் இருபதுக்கும் வித்தியாசம் உண்டா இல்லையா.
தன் பிள்ளை, தன் மருமகள், தன் பேரன், பேத்தி என சந்தோஷமாக இருக்க அவர்களுக்கு ஆசை இருக்காதா.

உங்களுக்கும் வயதாகும், முதுமை வரும், உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் தான் எடுத்துகாட்டு
யோசியுங்கள்.

- பாலு.

எழுதியவர் : பாலு (17-Aug-19, 6:14 pm)
சேர்த்தது : balu
Tanglish : kanneer megangal
பார்வை : 178

மேலே