ஏன் எப்படி எதற்காக
ஒவியனின் ஒய்வு நேர
ஒவியமோ
சிற்பகலையின் வரமான
சிற்பமோ
சல்லாபித்து திளைத்த
பிரம்மன்
பார்த்து பார்த்து படைத்த
படைப்போ
ஏன் என் பார்வையில்
விழுந்தாள்
எப்படியவள் உள் நுழைந்தாள்
எதற்காக மொந்தைக் கள்ளாய்
நிறைந்தாள்
என்னை சந்தைப் பொருளாய்
ஆக்கவோ