கால தாமதம்
கால தாமதம்
காலதாமதத்தால் விசைப்பறவை பறந்திடுமோ எனஅஞ்சி
கவலைகொண்டு கணநேரம் யோசனையில் ஆழ்ந்து
ஒளியோடு போட்டி யிட்டு மின்ரதமதை விரட்டி
கரும் பட்டை போல் நெடும் சாலையும் ஓடிட
கடந்த தூரமதை கைப்பேசி கணக்காக காட்டிட
காலம் கடப்பதை கைக்கடியாரம் உரைத்திட
கவலைமிகுந்த கண்கள் தூரத்தை கணக்கிட
கடவுளை வேண்டி கணங்களை கழித்திட
மனம் செல்லும் வேகம் மின்ரதம் ஓட மறுத்திட
அந்தி செய்த மாயையில் விண்ணும் மண்ணும் ஒன்றாகிட
மின் விளக்குகள் ஒளியில் விசைப்பறவை தளம் கண்டு
மானைப்போல் ஓடி வாயில் அடைகையில் அறிந்தேன்
விசைப்பறவை அன்று தாமதமாக செல்லு மென
மனம் பூரித்து மகிழ்ச்சியில் திளைத்ததம்மா