எதிரும் புதிரும்
தத்துப் பித்தென்ற பேச்சும்,
பொத்தாம் பொதுவாய் கருத்தும்,
அடாவடியாய் தடாலடியாய் செயலும்,
கூச்சம் நாச்சமின்றி காரியமும்,
அரை குறை ஆடையும்,
ஏடா கூடமாய் நட்பும்,
எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற இருமாப்பும்,
ஏட்டுக்குப் போட்டியாய் வாதமும்,
அரக்கப் பார்க்க பார்த்த வேலையும்,
அள்ளித்தெளித்த அலங் கோலமாய்,
ஒருவரை அதள பாதாளத்தில் விட்டு விடும்.