மானுட பைத்தியமே

மானுட பைத்தியமே!

உன் விவரம் தெரிந்த நாட்களில் இருந்து யோசி
நீ உனக்காக வாழ்ந்தாயா?
இல்லை என்பது தான் உன் பதிலாக கேட்கிறது.
உன்னால் உன் குடும்பம்
உன்னால் இந்த சமூகம்
உன்னால் தான் எல்லாம் என்று நினைத்து
உன் சந்தோஷத்தை இழுந்து விட்டாயே.
எல்லாம் விதிபடி நடக்கும்
என்று சொல்ல நான் ஒன்றும் மூடநம்பிக்கையில் மூழ்கியவன் அல்ல
வாழ்க்கை ஒரு விடுகதை என்பது மட்டும் நான் அறிந்த உண்மை.
நீ உலகிற்கு வந்ததே அனைத்தையும் ஆனந்ததுடன் அனுபவிபதற்கே.
அதை நீ புரிந்து கொள்ளாமல்
எப்போதும் பலத்த யோசனை
கடந்த காலத்து வருத்தம்
இதனால் உன் சந்தோஷம் பறிபோகிறது.
நன்றாக தெரிந்து கொள் மானுடனே
உன் வாழ்க்கையை நீ ஆனந்தமாக வாழ்ந்தால்
தான் உன் சுற்றமும் , நட்பும் செழிப்பாக அமையும்.
கவலை ஆளை கொன்றுவிடும்.
பலத்த யோசனை எதிர் கால பயத்தை உருவாக்கும்.
நடப்பது நடந்தே தீரும்
அதை தடுக்க யாராலும் முடியாது.
ஒவ்வொரு நொடியும் ஆண்டவன் உனக்கு ஆண்டவன் அருளிய வரபிரசாதம்.
அதை ஆக்கபூர்வமாக அனுபவி
சந்தோஷமாக இரு.
மகிழ்ச்சி மட்டுமே குறிக்கோளாக கொள்.
- பாலு.

எழுதியவர் : பாலு (25-Aug-19, 11:56 am)
சேர்த்தது : balu
பார்வை : 196

மேலே