தலையாட்டி பொம்மை

தலையாட்டி பொம்மை

தலையாட்டி பொம்மை!
தஞ்சை பெயர் தாங்கி
தரணி புகழ் ஓங்கும்
தமிழ் மண்ணின் அடையாளம்!

கரிகாலன் அனைதொடுத்த
காவிரியின் களிமண்ணில்
பொன்னி நீர் குழைத்தெடுத்தப்
பிறப்பெடுத்த பொம்மை!
இந்தத்
தலையாட்டி பொம்மை!

எம்மண் கூட அறம் சொல்லும்!
அதற்கு இது தான் அடையாளம்!
பொம்மை கூறும் மெய்மை கேட்டு
மண்ணிற்கு மாணவன் ஆனேன்!

தலையில் கணம்
இல்லை என்றால்
தரை வீழத் தேவையில்லை!

விழுந்தாலும் மீண்டும்
எழுந்தாக வேண்டும்!

தலையாட்டும் பொம்மை
என் தலைக்கேற்றிய பாடம் இது!

அதன் பாடத்தை
மறந்துவிட்டு, இன்று
நாமே ஆகிவிட்டோம்
தலையாட்டி பொம்மைகளாய்!

அரசியல் வாதிக்கு
அடித் தொண்டன்
தலையாட்டி பொம்மை!

அலுவல் மேலாளர்க்கு
அங்குள்ள ஊழியர்கள்
தலையாட்டி பொம்மை!

கார்ப்பரேட் முதலைக்குக்
கறை வேட்டி
தலையாட்டி பொம்மை!

போலி சாமிக்கு
ஆன்மீக அறிவாளிகள்
தலையாட்டி பொம்மை!

ஒவ்வொரு வீட்டிலும்
மனைவிக்குக் கணவனும்
கணவனுக்கு மனைவியும்
தலையாட்டி பொம்மை!

தலையாடும் இடத்தில்
கொஞ்சம் தாலாடினால் தான்
வார்த்தை பிறக்கும்!
உரிமை நிலைக்கும்!

பண்பில் மட்டும் இருப்போம்
தலையாட்டி பொம்மையாய்!
செய்கையில் அல்ல!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (26-Aug-19, 7:39 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : thalaiyaatti pommai
பார்வை : 529

மேலே