பெண்ணே உன்னைப் போற்றினேன்
கன்னம் இரண்டும் கனியாக
கண்கள் இரண்டும் வண்டாக
பற்கள் அழகு பூவாக
பார்த்து இரசித்தேன் தனியாக
இலையில் விழுந்த பனியாக
கழுத்தில் இட்ட முத்தக்குறி
இருந்தது அழகின் எழிலாக
ஆனாய் நீயோ சிலையாக
பவழ பொலிவின் ஒளியாக
பார்க்கத் தெரிந்தாய் சிவப்பாக
படர்ந்த கேசம் முகிலாக
பரவசமடைந்தேன் உனைக் காண
அறிவில் நீயே மலையாக
அனைத்தையும் உரைத்தாய் தெளிவாக
அம்பை எய்யும் நாணாக
அர்த்த வார்த்தையால் ஆராதித்தாய்
பெண்ணே நீயோ பால்நிலவு
பெருமைக் கொண்டது இவ்வுலகு
பொருத்தம் நமக்குள் பொருந்தியது
பொத்திக் கொண்டது என்மனது.
---- நன்னாடன்.