காதல் கவிதை

நான் தேடினேன்
உன்னையே நாடினேன்
என் கனவை நிறைவேற்றும்படி
வரமும் கேட்கிறேன்
காதலின் வேதம் காப்பாற்றிட

கவலை இல்லா முகத்தின்
சிரிப்பு மனதை அள்ளுதே
வண்ணமாய் சிறகை விரிக்கும்
வானவில்லும் மழையை கவருதே

நத்தை முதுகில் பயணம் செய்யும்
முயல் வேக மனதினை
இன்னும் இழுத்து பிடித்து பிடித்து
நெஞ்சோடு தான் அணைக்கவேண்டுமே

உருகி வழியும் வெண்ணை
போல காதல் இல்லையே
உந்தன் மனதை நானும்
தொட்டுப்பார்க்கையில்

ஆளைக்கொல்லும் அழகு பார்வை
உன்னக்கு சொந்தமே
உன் பார்வையில் என் மொட்டுகள்
அவிழ்ந்துவிட நானோ
தலைநிமிர்ந்து நிற்கிறேன்

கூட்டல் கணக்குகளாய்
நாம் கூடி களித்திடவே
நீளும் இரவிலே
நிலவும் பணியாய் தொடருதே

எடுத்து வைத்த அடிகள் நானும்
எண்ணிப்பார்க்கையில்
இரவல் உடைகளை
தேகம் தானாய் விலக்குதே

அழகின் பதங்கள் எண்ணி சொல்ல
உன் விரல்கள் போதுமே
காமன் கதவை திறக்க
கரும்பாய் இனிக்க உறவும் வேண்டுமே

படுக்கை அறையில் சிதறிக்கிடக்கும்
முத்தங்கள் யாவும் இயல்பானது
இதயம்தொட்ட இமயம்தொட்ட
உணர்ச்சிகளின் சங்கமம்தான் அது..........
சங்கமம்தான் அது!! சங்கமம்தான் அது!!!....

எழுதியவர் : மேகலை (28-Aug-19, 2:26 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 450

மேலே