அந்த அற்புதம்

அந்த அற்புதம்

என் வீட்டு மொட்டை மாடியில்
என் அருமை மனைவி என் பக்கத்தில் வந்து பவ்வியமாக அமர
இருவரும் ஆவி பறக்க சுவையான தேநீர் நிறைந்த கோப்பை கையில் ஏந்திய வண்ணம்
விடியற்காலை காலை வேளையில்
ஒரே பிரம்பு சாய்வு நாற்காலியில் இருவரும் ஒட்டி உரசி உட்கார்ந்து
சூரியோதயதத்தை ரசிக்க
கருமேகம் திடீரென்று என்று வானத்தில் சூழ
சின்னதாய் மழை பொழிய
அதில் நினைத்து இருவரும் ஆனந்தமாக சிரித்து மகிழ
மழை முடிந்தது
வானத்தில் சில நிமிடம் வானவில் தோன்ற
ஆஹா! அற்புதம், கண்கொள்ளா காட்சி
இயற்கை அன்னை வானத்தில் வண்ணக்கோலம் இட்ட காட்சி
நாங்கள் இருவரும் அதற்கு சாட்சி.

- பாலு.

எழுதியவர் : பாலு (30-Aug-19, 10:06 am)
சேர்த்தது : balu
Tanglish : antha arpudham
பார்வை : 194

மேலே