ஒரு கோலம் இரு வாசல்

தன்வீட்டு வாசலில் கோலமிட்ட
பக்கத்து வீட்டு இளம்பெண்
என்வீட்டு வாசலிலும் கோலமிட்டாள் !
அவள் வீட்டு வேலைக்காரி குப்பையை தெருவில் வீச
அவள் வாசல் கோலத்தை என் வாசல் கோலத்தை அலங்கோலமாக்கியது !
பார்த்த இளம்பெண் வேலைக்காரியை கடிந்து கொண்டாள்
மீண்டும் ஒருமுறை வாசல்களை பெருக்கச் செய்தாள் !
சோர்வின்றி மீண்டும் அதே கோலத்தை அழகாய்ப் போட்டாள்
இரு வாசலிலும் !

மண்ணில் குப்பை நீக்கி
மண்ணில் கோலமிட்டால் வாசலுக்கு அழகு
மனதில் குப்பை நீக்கி
போடும் மனக்கோலம் எல்லோருக்கும் அழகு என்றேன் !

மணக்கோலம் காணப்போகும் இளம்பெண்
மனமுவந்து கோலாகலமாய்ச் சிரித்தாள் !

எழுதியவர் : கவின் சாரலன் (2-Sep-19, 8:44 am)
பார்வை : 174

மேலே