விநாயக துதி
பல்லவியே என் பாட்டுக்கு பல்லவி
முதலடி இதுவே என்று பவித்திர
முதலடி எடுத்து தந்தாய் அதுவே
'பரமனும் பார்வதியும் எப்போதும் மகிழ்'
முதலடி பல்லவிக்கு சரணம் இதோ,
பால கணபதியே பாரில் இன்றுனை
பாலும் தேனும் பாகும் பருப்பும்
தந்து நிறை மனதோடு உன்னை
துதிப் போர்க்கு வேண்டும் வரம்
எல்லாம் அளித்து உயர்த்திடுவான்
ஒற்றை தந்தன் அவன்